பிக்பாஸில் முன்ன இருந்த பயம் இப்போ இல்ல.. இது டாமினன்ட்டா தான் இருக்கும்.. வாயைத் திறந்த வனிதா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிக்பாஸில் முன்ன இருந்த பயம் இப்போ இல்ல.. இது டாமினன்ட்டா தான் இருக்கும்.. வாயைத் திறந்த வனிதா

பிக்பாஸில் முன்ன இருந்த பயம் இப்போ இல்ல.. இது டாமினன்ட்டா தான் இருக்கும்.. வாயைத் திறந்த வனிதா

Malavica Natarajan HT Tamil
Oct 07, 2024 11:22 AM IST

பிக்பாஸ் சீசன் 8 நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து சில முக்கிய விஷயங்களைப் பேசியுள்ளார் வனிதா.

பிக்பாஸில் முன்ன இருந்த பயம் இப்போ இல்ல.. இது டாமினன்ட்டா தான் இருக்கும்.. வாயைத் திறந்த வனிதா
பிக்பாஸில் முன்ன இருந்த பயம் இப்போ இல்ல.. இது டாமினன்ட்டா தான் இருக்கும்.. வாயைத் திறந்த வனிதா

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள்

இந்த நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், மஹாராஜா புகழ் சச்சனா, இன்ஸ்டா பிரபலம் தர்ஷா குப்தா, ஆங்க்கர் தீபக், குக் வித் கோமாளி சுனிதா கோகோய், பாடி பில்டர் சத்ய குமார், பாக்கியலட்சுமி புகழ் விஜே விஷால், செல்லம்மா சீரியல் ஹீரோ அர்ணவ், நடிகர் ரஞ்சித், செல்லம்மா சீரியல் ஹீரோயின் அன்ஷிதா, பிரபல மாடல் செளந்தர்யா, பாரதி கண்ணம்மா ஹீரோ அருண், தென்றல் வந்து என்னை தொடும் ஹீரோயின் பவித்ரா ஜனனி, கானா பாடகர் ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, பொன்னி சீரியல் வில்லி தர்ஷிகா, பேச்சாளர் முத்துகுமரன் மற்றும் விஜே ஜாக்குலின் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர்.

களமிறக்கப்பட்ட ஒவ்வொருவரும் தன்னை இந்த சமூகத்திற்கும், தன் மீது விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்கும் யார் என்று நிரூபிப்பதற்காக விளையாட வந்துள்ளதாக கூறினர். அவர்களுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே, டாஸ்க் கொடுக்கப்பட்டது.

ரூம் பஞ்சாயத்து

இந்நிலையில், ஆட்டத்தை புதிதாக ஆரம்பிக்கும் பொருட்டு, போட்டியாளர்களை உள்ளே அனுப்பிய உடனே அதற்கான வேலையை பார்த்துவிட்டது பிக்பாஸ். ரூம் பஞ்சாயத்தை கொடுத்து, உள்ளே நுழையும் போதே டீம் செட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் போட்டியாளர்கள் தள்ளப்பட்டு விட்டனர். அதற்கு ஒத்துப்போகதவர்கள் இருந்தாலும், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு என்பதால், அதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், எவ்வளவு எடுத்துக் கூறியும் ரூம் தேர்ந்தெடுத்த விவகாரகத்திற்கும், அதற்காக ஆண்கள் அணி வைத்த கோரிக்கைக்கும் உடன்பட மறுத்த ஜாக்குலின், ஹாலில் படுத்து உறங்கி, தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். இதையடுத்து, கடைசி போட்டியாளர் உள்ளே நுழைந்த உடனேயே அங்கு பிரச்சனையும் ஆரம்பித்து விட்டதாகவே தெரிகிறது.

தொடங்கிய நாமினேஷன்

இதற்குள், பிக்பாஸ் தற்போது, இந்த நாளுக்கான ப்ரமோவை வெளியிட்டுள்ளது. அதில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவரை எவிக்ஷன் செய்வது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து, முதல் நாள் காலையை பாட்டுடன் ஆட்டம் போட்டு ஆரம்பிக்கும் போட்டியாளர்கள் அடுத்தது தங்கள் வேலையை ஆரம்பிக்கின்றனர்.

இந்த நிலையில், பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றதன் மூலம் சினிமாவில் செகண்டு இன்னிங்ஸில் களமிறங்கிய வனிதா, சீசன் 8 குறித்து, பிக்பாஸ் vs வனிதா நிகழ்ச்சியில் சில கருத்துகளை முன் வைத்துள்ளார். அவை இப்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது.

ரவீந்தர் பிக்பாஸ் வர நானே காரணம்

அந்நிகழ்ச்சியில், பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக களமிறங்கப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் குறித்து பேசியுள்ளார். அப்போது, நானும் ரவீந்தர் போல உடல் எடை அதிகரிப்பால் மிகவம் பாதிக்கப்பட்டேன். ஆனால், இப்போது அதிலிருந்து முழுவதும் விடுபட்டுவிட்டேன். இவரின் உடல்எடை என்பது கேலி செய்யக்கூடிய விஷயம் கிடையாது. அது ஒரு நோய் என்றார். அதுமட்டுமின்ரி, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும், ரவீந்தர் உடல் எடையை குறைக்கு முயற்சி செய்ய வேண்டும் எனக் கூறினார்.

பயம் இல்லை

மேலும், ரவீந்தர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல நான்தான் காரணம். ரவீந்தரை நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக அழைக்குமாறு நான்தான் பரிந்துரைத்தேன் எனவும் கூறியிருந்தார். பின்னர் பேசிய அவர், பிக்பாஸிற்கு புதிய தொகுப்பாளராக வந்துள்ள விஜய் சேதுபதி ஃபயராக செயல்படுகிறார். முன்பு கமல்ஹாசன் இருக்கும் போது அவரிடம் பேச பலரும் பயப்படுவர். ஆனால், தற்போது விஜய் சேதுபதியிடம் அனைவரும் சகஜமாக பேசுகின்றனர். இதனால், அந்த பயம் இப்போது இல்லை எனக் கூறினார்.

அவரைப் பற்றி நிறைய தெரியும்

பிக்பாஸ் போட்டிக்கு வந்துள்ள நடிகர் ரஞ்சித்தின் மனைவி எனக்கு நல்ல தோழி. அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் எனக்குத் தெரியும். அதேசமயம், நான் சீரியல் பார்க்காததால், அர்னவ் பற்றியும் அவர் என்ன செய்தார். அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என எதுவும் தெரியாது எனக் கூறியதுடன் வாழ்க்கையில் எப்போதும் சீரியல் பார்க்கமாட்டேன் எனவும் கூறியிருந்தார்.

அத்துடன் ஆண்கள் அணி பெண்கள் அணி என பிரிக்கப்பட்டுள்ளதால், போட்டி கடுமையானதாகவே இருக்கும் என நினைக்கிறேன். இந்த போட்டி மிகவும் டாமினன்ட்டாக இருக்க வாய்ப்புள்ளது. என்னைப் பொருத்தவரை பெண் போட்டியாளர்களில் ஒருவர் தான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவர் எனத் தெரிகிறது என்றார்.

Whats_app_banner