Ranjith: 'வன்மமாக முதுகில் குத்துறாங்க.. நான் காதலுக்கு எதிரி கிடையாது.. ஆனால்’: பொங்கிய கவுண்டம்பாளைய நடிகர் ரஞ்சித்-kavundampalayam actor ranjith said that i am not an enemy of love and that i am backstabbing fiercely - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ranjith: 'வன்மமாக முதுகில் குத்துறாங்க.. நான் காதலுக்கு எதிரி கிடையாது.. ஆனால்’: பொங்கிய கவுண்டம்பாளைய நடிகர் ரஞ்சித்

Ranjith: 'வன்மமாக முதுகில் குத்துறாங்க.. நான் காதலுக்கு எதிரி கிடையாது.. ஆனால்’: பொங்கிய கவுண்டம்பாளைய நடிகர் ரஞ்சித்

Marimuthu M HT Tamil
Aug 10, 2024 05:24 PM IST

Ranjith: 'வன்மமாக முதுகில் குத்துறாங்க என்றும்; நான் காதலுக்கு எதிரி கிடையாது என்றும் பொங்கிய கவுண்டம்பாளைய நடிகர் ரஞ்சித்தின் பேட்டி வைரல் ஆகியுள்ளது.

Ranjith: 'வன்மமாக முதுகில் குத்துறாங்க.. நான் காதலுக்கு எதிரி கிடையாது.. ஆனால்’: பொங்கிய கவுண்டம்பாளைய நடிகர் ரஞ்சித்
Ranjith: 'வன்மமாக முதுகில் குத்துறாங்க.. நான் காதலுக்கு எதிரி கிடையாது.. ஆனால்’: பொங்கிய கவுண்டம்பாளைய நடிகர் ரஞ்சித்

‘சாதியை அடிப்படையாகக் கொண்ட படம் கிடையாது கவுண்டம்பாளையம்’:

இதுதொடர்பாக நடிகர் ரஞ்சித் அளித்த பேட்டியில், ‘’சாதியை அடிப்படையாகக் கொண்ட படத்தோட பேர் என்று யோசிக்க வேண்டாம். கவுண்டம்பாளையம் என்பது ஒரு சட்டமன்றத்தொகுதி. கொங்கு மண்டலத்தில் கவுண்டம்பாளையம் என்கிற பல ஊர்கள் இருக்கின்றன. கவுண்டம்பாளையம்னு பெயர் வைச்சதும் இது சாதிப்படம் அப்படிங்கிறது கிடையாது. என்னைப் பற்றி வன்மங்கள் கற்பிக்கனும் இல்லையா?. ஏதாவது சொல்லி மற்ற சமூகத்தினர் என்னைப் புறக்கணிக்க வைக்கனும் அப்படிங்கிறது தான். மேலும்,ஏதாவது சொல்லி, என்னை ஒரு சிறிய டப்பிக்குள்ள அடைக்கவைக்கணும்கிறதாத்தான் இருக்கு. அது மக்களுக்குத் தெரியும். 100 படம் நடிச்சிருக்கேன். இப்போது கூட பாக்யலட்சுமி சீரியல்ல நடிச்சிட்டிருக்கேன். தாய்மார்கள் என்னைப் பார்க்கிறார்கள். மற்ற எந்தவொரு தாய்மாரும் என்னை வெறுப்பதுபோல், ஒருபோதும் நான் நடந்துகொள்ளமாட்டேன்.

சமூக வலைதளத்தில் எங்கிருந்து அடிக்கிறானுங்கன்னு தெரியலை. நான் தான் படத்தின் இயக்குநர். நான் நேர்மையாக இருக்கிறேன். சிலர் என் பெயர் சொல்ல விரும்பாதவங்க, வெறுக்கிறவங்க, மறைமுகமாக ஏதோவொரு பின்புலத்தில் இருந்து முதுகில் குத்தும் செயல்களை செய்துகொண்டு வருகின்றனர்.

நிறைய படங்கள் வெளியே வரும்போது, தயாரிப்பாளர் சங்கம் அதை வரைமுறைப்படுத்தவேண்டும். இல்லையென்றால், படம் வெளியாகும்போது காணாமல்போய்விடும்.

'நான் ஒரு ஏழை கலைஞன் - நடிகர் ரஞ்சித்’:

நான் பெரிய உச்ச நடிகர் எல்லாம் கிடையாதுங்க. நான் ஒரு ஏழை கலைஞன். படம் நிறையபேருக்கு பிடிச்சிருக்கு. அந்த வகையில் பெரிய சப்போர்ட்ட படம் பார்த்த நீங்கள் மட்டும் தான்.

தகப்பனோட வலிய சொல்ல இந்தப் படம் எடுத்திருக்கேன். இது காதலுக்கு எதிரியான படம் கிடையாது. ஆனால், நாடகக் காதலை எதிர்க்கும் படம். இந்தப் படம் எடுத்தது ரொம்ப சந்தோஷம்.

என்னை எதிர்த்து எழுதுறவங்க எல்லோரும் படம் தணிக்கைக்கு உள்ளானதைப் புரிஞ்சிக்கணும். குடும்பங்கள் வாங்க. பெற்றோர் வாங்க. சமூகம் பிழைக்கணும் நினைக்கிறவங்க தியேட்டருக்கு வாங்க.

அதைவிட்டுட்டுப் படம் பார்க்காமல், எங்கேயோ உட்கார்ந்துகிட்டு தவறாக எழுதும்போது சின்ன படத்தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவார்கள். கவுண்டம்பாளையம் நல்ல படம். இப்படத்தை நம்பி காட்சிகள் கொடுத்த திரையரங்கு அதிபர்களுக்கு மனமார்ந்த நன்றி.

ஊடகத்தினுடைய பரிணாம வளர்ச்சியில், மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக, தரம் தாழ்ந்த பதிவுகளை ஈடுவதை நானும் பார்ப்பது உண்டு. அது மனசுக்கு கஷ்டமாயிருக்கு. நாம் வாழ்க்கையில் யாரையாவது வாழவைக்கனும். நீங்க நல்லாயிருக்கீங்க அப்படின்னு நம்பிக்கை கொடுக்கணும். ஒருத்தர் பத்தி குறை சொல்ல, தனி நபர் வாழ்க்கையைத் தாக்கி, குடும்பத்தைக் கஷ்டப்படுத்துவதால் நிறையபேர் மனதளவில் உடைஞ்சிடுவாங்க. ஏன் தற்கொலைக்கு காரணமாக அமைஞ்சிரும். ஊடகங்கள் அப்படி நிறைய நேரத்தில் அப்படி போயிடுமோன்னு அச்சமாக இருக்கிறது. அதையும் முறைப்படுத்த வேண்டும்.

சினிமாவுக்கு சென்சார் இருக்கு. ஊடகங்களைப் பார்க்கிற நமக்கு மனசாட்சி தான் சென்சார். நமக்கு மனைவி, குடும்பம், குழந்தைகள் எல்லாம் இருக்குது எனப் புரிந்துகொள்ளவேண்டும். சமூக ஊடகத்தின்மூலம் சந்தேகத்தை தான் கிளப்பிக்கொண்டு இருக்கிறோமே தவிர, ஆரோக்கியமான சூழல் இல்லை. அதனால் ஊடகங்களை கொஞ்சம் நெறிமுறைப்படுத்தணும் நினைக்கிறேன்’’ என நடிகர் ரஞ்சித் பேட்டியளித்துள்ளார்.

நன்றி: ஐபிசி தமிழ்

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.