மூன்று வருட இடைவெளிக்கு பிறகு வந்த ஜாக்குலின்.. பிக் பாஸ் டைட்டில் பட்டம் கிடைக்குமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசனில் கடைசி போட்டியாளராக ஜாக்குலின் கலந்து கொண்டு உள்ளார். அவர் யார், அவரின் பின்புலம் என்ன என்பதை பார்க்கலாம்.
உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8
பிக் பாஸ் 8 ஆவது சீசன் தொடங்க போகிறது என சொன்னதில் இருந்து மக்கள் எப்போது தொடங்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.
பிக் பாஸ் வீடு
இந்த சீசனில் நிகழ்ச்சி சிறப்பாகவே களைக்கட்டும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த சீசனிலேயே 2 பிக் பாஸ் வீடுகள் என அடுத்தடுத்து வித்தியாசத்தை காட்டிய இந்த நிகழ்ச்சி, இந்த சீசனில் எந்த மாதிரியான வித்தியாசங்களுடன் ரசிகர்களை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தது.
பிரமாண்டமான பிரீமியர் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6 ) ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் ஜாக்குலின் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார்.
யார் இந்த தொகுப்பாளினி ஜாக்குலின்
ஜாக்குலின் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழ் நாட்டின் பண்ணூரில் பிறந்தார். அவர் தனது பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள செயின்ட் மேரிஸ் படிப்பை இந்தியாவின் Hr Sec பள்ளியில் பயின்றார் . அவள் பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன், சென்னை லயோலா கல்லூரியில் முடித்தார். மேலும் சென்னையில் உள்ள ஃபிராங்க்ஃபின் இன்ஸ்டிடியூட் ஆப் ஏர்ஹோஸ்டஸ் பயிற்சியில் ஏர் ஹோஸ்டஸ் படிப்பையும் படித்தார்.
கலக்க போவது யாரு
ஜாக்குலின், விஜய் டிவியில் ஒளிபரப்பான கானா காணும் கலங்கள் சீரியலில் அடியெடுத்து வைத்தார். பின்னர் விஜய் சீரியலில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்தார். கலக்க போவது யாரு, விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ அவரது கேரியரில் மாற்றங்களைக் கொண்டு வந்தது.
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியை சேர்ந்த தொகுப்பாளர் ஒருவர் போட்டியாளராக உள்ளே நுழைவார்கள். அந்த வகையில் தான் இந்த முறை பிக் பாஸ் 8 ஆவது சீசனில் ஜாக்குலின் போட்டியாளராக உள்ளே சென்று இருக்கிறார் என்று கருத்தப்படுகிறது. மூன்று வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு ஜாக்குலின் வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதியின் ஆங்கரங்கில் இந்த நிகழ்ச்சி எப்படி அமையும் என்பது குறித்து ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் பார்ப்போம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்