தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7 Tamil: இந்த வாரம் வாக்கு எண்ணிக்கையில் கடைசி இடத்தில் இருப்பது யார்?

Bigg Boss 7 Tamil: இந்த வாரம் வாக்கு எண்ணிக்கையில் கடைசி இடத்தில் இருப்பது யார்?

Aarthi V HT Tamil
Dec 23, 2023 06:54 AM IST

இந்த வாரம் வாக்கு எண்ணிக்கையில் கடைசி இடத்தில் இருப்பது யார் என பார்க்கலாம்.

பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7

ட்ரெண்டிங் செய்திகள்

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆறு சீசன்களின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, 7 ஆவது சீசனை முற்றிலும் புதுமையாக கொண்டு வந்து இருக்கிறது. ஸ்மால் பாஸ் மற்றும் பிக் பாஸ் வீடு என இரண்டு புதிய கருப்பொருளை கொண்டு வந்து இருக்கிறது.

இந்த வாரம் எலிமினேஷனுக்கு விசித்ரா, ரவீனா மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர்.

சமீபத்திய வாக்களிப்பு படி, விசித்ராவிற்கு ஆதரவாக 40 % வாக்கு கிடைத்து அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 32.34 சதவீத வாக்குகளுடன் ரவீனா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இம்முறை வாக்குகளுக்காக போராடியவர் சரவண விக்ரம். அவர் இதுவரை 27.04% வாக்குகளைப் பெற்றுள்ளார், இது இந்த வாரத்தில் மிகக் குறைவு. இதனால் 12 ஆவது வாரத்தில் விக்ரம் எலிமினேட் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், விக்ரம் வெளியேற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

பிக் பாஸ் 7 ஆவது சீசன் வீட்டில் இருந்து முதல் நபராக அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பட்டார். அவர் வெளியேறிய இரண்டாம் நாளே எழுத்தாளர், பவா செல்லதுரை தனது உடல் நிலையை காரணம் காண்பித்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறி சென்றார்.

அவரை தொடர்ந்து மூன்றாவது நபராக பிக் பாஸ் வீட்டில் இருந்து விஜய் வர்மா வெளியேறினார். 4 ஆவது நபராக அடுத்தடுத்து யுகேந்திரன், வினுஷா, அன்னா பாரதி, பிரதீப், ஐஷூ, பாலா, பிரவோ, அக்‌ஷயா, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறப்பட்டனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்