Bayilvan: நடிகை மீனா காதலித்த நபர்.. நடிகையின் பின்னழகை பதம்பார்த்த நடிகர் - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி-bayilvan ranganathan talked about actress meena love story and one actor attacked the backsside of actress - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: நடிகை மீனா காதலித்த நபர்.. நடிகையின் பின்னழகை பதம்பார்த்த நடிகர் - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி

Bayilvan: நடிகை மீனா காதலித்த நபர்.. நடிகையின் பின்னழகை பதம்பார்த்த நடிகர் - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி

Marimuthu M HT Tamil
Sep 02, 2024 04:17 PM IST

Bayilvan: நடிகை மீனா காதலித்த நபர்.. நடிகையின் பின்னழகை பதம்பார்த்த நடிகர் குறித்தும் சினிமா மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டியளித்துள்ளார்.

Bayilvan: நடிகை மீனா காதலித்த நபர்.. நடிகையின் பின்னழகை பதம்பார்த்த நடிகர் - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி
Bayilvan: நடிகை மீனா காதலித்த நபர்.. நடிகையின் பின்னழகை பதம்பார்த்த நடிகர் - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி

இதுதொடர்பாக சினிமாவின் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கிங் 24x7 யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘’சமீபத்தில் நகுல் கதாநாயகனாக நடித்த படம், வாஸ்கோடகாமா. இந்தப் படத்தில் நடிகை சுனைனா நடிகையாக நடித்து இருந்தார். ஆனால், இப்படத்தில் முதன்முதலில் நடிகையாக கமிட் ஆனவர்,நடிகை பிரிகிடா. அவர் படப்பிடிப்புக்கு வரும்போது அவருடன் துணைக்கு அவரது அப்பா வருவார். அப்போது அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டிருக்கிறார், நடிகர் நகுல். மறுத்திருக்கிறார், நடிகை பிரிகிடா. இதன்காரணமாக நடிகை பிரிகிடாவை நீக்கிவிடுங்கள் எனச் சொல்லியிருக்கிறார், நடிகர் நகுல். அவருக்குப் பதிலாக, நடிகை சுனைனாவை இப்படத்தில் கதாநாயகி ஆக்கிவிடுங்கள்; அவர் நன்கு ஒத்துழைப்பார் எனக் கூறியிருக்கிறார், நடிகர் நகுல். இதனை அப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சந்துரு வெளியில் கூறியிருக்கிறார். இதுபற்றி படக்குழுவினரிடம் விசாரிக்கையில், ’சந்துரு ஒரு லூஸு; இரண்டு மூன்று நாட்கள் தான் வந்தார். அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் இயக்குநர் அவரை நீக்கிவிட்டார். அந்த வன்மத்தைத் தீர்க்க இப்படிப்பழிபோடுகிறார், சந்துரு’ எனப் படக்குழுவினர் விளக்கமளித்தனர்.

நடிகையின் உச்சகட்ட கவர்ச்சி:

நடிகை ஸ்ரேயா சரணுக்கு வயது 42. திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயாகி இருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரையில் நடிப்பு, பின் மாடலாகப் பணியாற்றியபின், தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார், ஸ்ரேயா சரண். அதன்பின் தமிழில் ரஜினி காந்த், விஜய், விக்ரம் உள்ளிட்டப் பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார், ஸ்ரேயா சரண். 42 வயது எட்டியிருக்கும் நிலையில் தங்க நிற பிரா அணிந்து, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டிருக்கிறார், நடிகை ஸ்ரேயா சரண். இதுபோன்ற காரியங்களால் தான் சினிமாக்காரர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுப்பதில்லை எனச் சொல்லிவிடுகின்றனர். நடிகைகள் போனால் கை எடுத்து கும்பிடுவதுபோல் இருக்கவேண்டும்; கூப்பிடுவதுபோல் இருக்கக் கூடாது. இதில் சில நடிகைகள் விதிவிலக்கு.

நடிகை ஸ்வேதா மேனன், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்தவர். ரதி நிர்வேதம் என்னும் படத்தில் நடிக்கும்போது, கதாநாயகன் என் பின்புறத்தைத் தாக்கவேண்டும் என இயக்குநர் சொல்லிவிட்டுப்போனார். ஆனால், அந்த நடிகர் என் பின்புறத்தில் அடித்து, கந்திப்போய் சிவந்து, டாக்டரிடம் செல்லுமளவுக்கு ஆக்கிவிட்டார் அந்த கதாநாயகன் எனச் சொல்லியுள்ளார், ஸ்வேதா மேனன். இவரது கவர்ச்சிப் புகைப்படங்கள் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.

பயில்வான் சொன்ன சொல்லமறந்த கதை:

நடிகை மீனா தன் தாய் சொல்வதைக் கேட்டு நடப்பவர். மீனாவின் அம்மாவும் ஒரு நடிகை தான். ஆனால், வயதுக்கோளாறில் மீனாவும் மாட்டினார். 1990களில் டபுள்ஸ் என்ற படத்தில் மீனாவும் பிரபுதேவாவும் நெருக்கமான காட்சிகள் பலவற்றில் நடித்தனர். இதனால் பிரபுதேவாவுடன் நெருக்கமாகப் பழகினார், மீனா. ஒரு கட்டத்தில் பிரபுதேவாவை திருமணம் செய்ய நினைத்தார். ஆனால், அவரது தோழிகள் நடிகர் பிரபுதேவா எல்லோரிடமும் இப்படி நெருக்கமாகப் பழகுவார் என்று சொல்லித் திட்டிவிட்டனர். இதனால் மனம்திருந்தி பெங்களூரு தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டார், மீனா.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘தி கோட்’ படத்தின் ட்ரெய்லர், வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது. ட்ரெய்லர் முழுக்க ஆக்‌ஷன் பேக்காக அமைந்தது. இந்தப் படத்தில் காந்தி பெயரை கொண்ட நடிகர் விஜய் மது அருந்துவார். ட்ரெய்லரில் வரும் வசனம் நடிகர் விஜய், நிறைய பெண்களுடன் தொடர்புடையவர் போலே காட்டுகிறது. படத்தில் அரசியல் இருப்பதாகத்தெரியவில்லை. படத்தில் வில்லனாக நடித்த மோகனின் குரல் சகிக்கவில்லை. ஏனென்றால், அது அவரது ஒரிஜினல் குரல். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் விஜய்யின் இளமைத்தோற்றம் தான், படத்தின் பிளஸ் பாயிண்ட்.

தி கோட் படத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் புரோமோஷன் செய்யக்கூடாது எனக் கூறியிருக்கிறார், விஜய்’’என சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

நன்றி: கிங் 24x7 யூட்யூப் சேனல்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.