Swarnamalya ganesh: ‘அப்ப ரொம்ப சின்ன வயசு.. அதனால..’ - விவாகரத்து குறித்து மனம் திறந்த சொர்ணமால்யா!
சொர்ணமால்யா தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்தும், விவாகரத்து குறித்தும் பேசி இருக்கிறார்.

சொர்ணமால்யா பேட்டி!
இது குறித்து அவர் பேசும் போது, “நிச்சயமாக இப்போது இருக்கக்கூடிய புரிதல், அப்போது இல்லை. என் வாழ்க்கையில் கல்யாணம் நடந்தது;அதை விட்டு வெளியே வந்தோம் அவ்வளவுதான். அப்படித்தான் அதனை அணுகினோம்.
ஆனால், அந்த மணமுறிவில் நான் உடைய வில்லை என்று சொல்லி தப்பித்துக்கொள்ளவும் முடியாது. ஆனால், நல்ல வேளையாக அந்த சமயத்தில் என்னை சுற்றி நல்ல பெண்கள் இருந்தார்கள்.
என்னுடைய வாழ்க்கையில் விவாகரத்து என்ற கான்செப்ட் வந்த உடனே, என்னுடைய அம்மா என்னை எம்.ஏ. படிக்க சேர்த்து விட்டுவிட்டார். அந்த சமயத்தில் அவர் எதற்காகவும் வாழ்க்கை நிற்க போவதில்லை. ஆகையால் படிப்பில் கவனம் செலுத்து என்றார்.
