Bayilvan: லேடீஸ் காலேஜ் வாசலுக்கு தினமும்போகும் நடிகர்.. நடிகையை ரேப் செய்த புகாரில் ஜாமீன் பெற்ற நடிகர்: பயில்வான்-bayilvan ranganathan also interviewed about the actor who got bail in the complaint of raping the actress - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: லேடீஸ் காலேஜ் வாசலுக்கு தினமும்போகும் நடிகர்.. நடிகையை ரேப் செய்த புகாரில் ஜாமீன் பெற்ற நடிகர்: பயில்வான்

Bayilvan: லேடீஸ் காலேஜ் வாசலுக்கு தினமும்போகும் நடிகர்.. நடிகையை ரேப் செய்த புகாரில் ஜாமீன் பெற்ற நடிகர்: பயில்வான்

Marimuthu M HT Tamil
Sep 01, 2024 02:56 PM IST

Bayilvan: லேடீஸ் காலேஜ் வாசலுக்கு தினமும்போகும் நடிகர்.. நடிகையை ரேப் செய்த புகாரில் ஜாமீன் பெற்ற நடிகர் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார்.

Bayilvan: லேடீஸ் காலேஜ் வாசலுக்கு தினமும்போகும் நடிகர்.. நடிகையை ரேப் செய்த புகாரில் ஜாமீன் பெற்ற நடிகர்: பயில்வான்
Bayilvan: லேடீஸ் காலேஜ் வாசலுக்கு தினமும்போகும் நடிகர்.. நடிகையை ரேப் செய்த புகாரில் ஜாமீன் பெற்ற நடிகர்: பயில்வான்

இது தொடர்பாக சினிமா மூத்த பத்திகையாளர் பயில்வான் ரங்கநாதன் நியூஸ்டன் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘’சமீபத்தில் சினிமாவில் நடக்கும் பாலியல் பலாத்கார விஷயங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைத்தது. அந்தக் கமிட்டியில் நடிகை சாரதா, ஐஜி உள்ளிட்டப் பலரும் இடம்பெற்றிருந்தனர். அந்தக்கமிட்டியின் அறிக்கை வெகுநாட்களாக, வெளிவராத நிலையில், சமீபத்தில் அந்தக் கமிட்டியின் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கைக்குப் பின் கேரளத் திரையுலகம் பற்றி எரிகிறது. இந்த அறிக்கைக்குப் பின் கேரள சட்டமன்ற எம்.எல்.ஏவும் நடிகருமான முகேஷ், இயக்குநர் சித்திக், நடிகர் ரியாஸ் கான் உள்ளிட்டப் பல நடிகர்கள் மீது நடிகைகள் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்து இருந்தது, ஹேமா கமிட்டியின் அறிக்கை மூலம் தெரியவந்தது.

ரியாஸ் கான் மீது வந்த பாலியல் புகார்:

நடிகை ரேகா சம்பத், நடிகர் ரியாஸ்கான் எனக்கு பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார் என்று கூறினார். அதுமட்டுமின்றி ஆபாசமாக உரையாடி, தன்னை வந்து சந்திக்கும்படியும், தன் தோழிகளை அழைத்துவரும்படியும் ரியாஸ்கான் கூறியதாக ஊடகத்தில் தெரிவித்தார். இதற்கு ரியாஸ் கான், தனக்கு ரேகா சம்பத் யார் என்றே தெரியாது என்றும், தன் பெயரை வைத்து சிலர் கால் செய்திருக்கலாம் என்றும், தான் விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் கூறிவிட்டார். அதேபோல், நடிகர் முகேஷ் முன் ஜாமீன் எடுத்துவிட்டார். வழக்கையும் சட்டப்படி,சந்திக்கத் தயார் என்று சொல்லிவிட்டார்.

இப்போது இன்னொரு புகாரும் முகேஷ் மீது பதிவாகியிருக்கிறது. இதற்கிடையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அரசு பெண்கள் கலைக்கல்லூரியின் நிர்வாகி ஜார்ஜ் என்பவர் அளித்த பேட்டியில், தங்களது கல்லூரியின் முன்பு தினமும் ஒரு வெளிநாட்டுக்காரில் வந்து மலையாள நடிகர் காத்திருந்து அங்கு வரும் மாணவிகளிடம் நடிக்க வாருங்கள் எனச்சொல்லி பாலியல் சீண்டல் செய்கிறார் எனப் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், தான் யாரிடமும் புகார் அளிக்கவில்லை என ஜார்ஜ் பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஊர்வசியின் கண்டனம்:

இதனைத்தொடர்ந்து, நடிகை குட்டி பத்மினி கேரளாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் பாலியல் பலாத்காரப் பிரச்னை இருந்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மலையாளத் திரையுலகில், பாலியல் பிரச்னை பூதாகரமாக ஆனதும், மலையாள சங்கத்தின் தலைவர் மோகன் லால் உட்பட ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிட்டுப்போய்விட்டனர். இதுபற்றி தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பல ஹிட் படங்களில் நடித்த நடிகை ஊர்வசி அளித்தபேட்டியில், மோகன் லால் உட்பட பல முன்னணி கேரள நடிகர்கள், அம்மா சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தது கண்டனத்திற்குரியது என்றார். மேலும் இவ்விசயத்தில் கேரள நடிகர் சங்கம் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறியிருக்கிறார், நடிகை ஊர்வசி.

உச்ச நீதிமன்றமே பெண்கள் அவரது விருப்பப்படி யாரிடமும் உடலுறவு கொள்ளலாம் எனத் தீர்ப்பு தந்திருக்கிறது.

இதுவரை விபச்சார வழக்கில் எந்த ஒரு நடிகையும் சிறைத்தண்டனை பெற்றது கிடையாது. அபராதம் தான் வாங்கி இருக்கிறார்கள். இதுபோன்ற விவகாரத்தில், விபச்சாரம் செய்யும் ஆண்களையும் தண்டிக்கவேண்டும் என எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார்.

இன்னொருவனின் மனைவியும், இன்னொருவளின் கணவரும் மனம் ஒத்து உடலுறவுகொண்டால், என்னப்பா பாலியல், என்னப்பா மீ டூ என சொல்லத்தோன்றுகிறது. இதனால் ஒன்றும் நடக்காது’’ என்று கூறியிருக்கிறார், பயில்வான் ரங்கநாதன்

நன்றி: நியூஸ்டன் தமிழ் யூட்யூப் சேனல்!

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.