தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Baakiyalakshmi :ஷாக்! பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்?

Baakiyalakshmi :ஷாக்! பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்?

Divya Sekar HT Tamil
Jan 27, 2023 11:44 AM IST

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்

ட்ரெண்டிங் செய்திகள்

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடும் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, ஒவ்வொரு வாரமும் டிஆர்பி யில் முதல் மூன்று இடத்தில் இருக்கும் இந்த சீரியலில், சுசித்ரா பாக்கியா என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்த வருகிறார். ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா பாக்கியாவின் கணவர் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற தொடரின் மூலமாகத்தான் முதன் முதலில் ரேஷ்மா சின்னத்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இவருடைய தந்தை பிரசாத் மிகப்பெரிய தயாரிப்பாளர்.

தனது தந்தை தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் ரேஷ்மா மிகப் பிரபலமானார். இதுவே அவருடைய முதல் படமாகும். பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா இதுவரை எத்தனையோ சீரியல்கள் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியல் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். ரேஷ்மா என்பதை தாண்டி ராதிகா என்றால் அனைவருக்கும் தெரியும் என்ற அளவுக்கு இவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களாக ரேஷ்மா பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலக இருப்பதாகவும் அவருக்கு வேறு ஒரு சேனலில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து ரேஷ்மா எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் இந்த அழகான நினைவுகளுக்கு நன்றி என்று பதிவிட்டு இருந்தார். மேலும் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சீதாராமன் சீரியலில் நடிக்க இருக்கும் தகவலும் தற்போது உறுதியாகியுள்ளது.

இதனால் ராதிகா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில் பிக்பாஸ் பிரபலம் நடிகை வனிதா நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ராதிகாவும் சீரியலை விட்டு விலக இருப்பதாக உறுதியாக அறிவிக்கவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

IPL_Entry_Point

டாபிக்ஸ்