தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vanangaan Poster: பெரியார், பிள்ளையாரோடு நிற்கும் அருண் விஜய்.. மிரட்டும் வணங்கான் போஸ்டர்

Vanangaan Poster: பெரியார், பிள்ளையாரோடு நிற்கும் அருண் விஜய்.. மிரட்டும் வணங்கான் போஸ்டர்

Aarthi V HT Tamil
Sep 25, 2023 11:00 AM IST

நடிகர் அருள் விஜய்யின் வணங்கான் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

வணங்கான்
வணங்கான்

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக நந்தா, பிதாமகன் உள்ளிட்ட ஹிட் படங்களில் சேர்ந்து பணியாற்றிய இயக்குனர் பாலா- நடிகர் சூர்யா கூட்டணி, சிறிய இடைவெளிக்குப் பின் வணங்கான் படத்தில் இணைந்தது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், அதற்கான படப்பிடிப்பு தொடங்கி நடந்த நிலையில், அது தொடர்பான அடுத்தடுத்த சர்சைகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

குறிப்பாக, படப்பிடிப்பை பாலா இழுத்தடிப்பதாகவும், எடுத்த காட்சிகளை திரும்ப திரும்ப எடுப்பதாகவும், இதனால் சூர்யா அப்செட்டில் இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஒரு கட்டத்தில் வணங்கான் படம் ட்ராப் ஆவதாக செய்தி வந்த போது, நடிகர் சூர்யா அதை மறுத்து, ட்விட் ஒன்றை வெளியிட்டார். பட கதை மாற்றியதால் அதில் தனக்கு நடிக்க விருப்பம் இல்லை என கூறினார் சூர்யா. 2டி நிறுவனமும் உடன் வெளியேறியது. பின்னர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனத்தை பெற்று இருக்கிறது. அதில் ஒரு கையில் பெரியார் சிலையும், இன்னொரு கையில் பிள்ளையார் சிலையையும், அருள் விஜய் உடல் முழுவதும் சேறு பூசப்பட்ட நிலையில் வைத்து கொண்டு காட்சி அளிக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், சமூகத்தில் நிலவும் பிரச்னையை மையமாக கொண்டு படம் உருவாகி வருவதாக கணித்து உள்ளனர். மேலும் இப்போஸ்டர் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்