Radhika Apte: காந்தம்போல் ஈர்க்கும் கண்கள்.. கபாலி ஹீரோயின் ராதிகா ஆப்தேவுக்கு தமிழ்நாட்டுக்கும் உள்ள பந்தம் தெரியுமா?
Radhika Apte: காந்தம்போல் ஈர்க்கும் கண்கள்.. கபாலி ஹீரோயின் ராதிகா ஆப்தேவுக்கு தமிழ்நாட்டுக்கும் உள்ள பந்தம் பற்றி, ராதிகா ஆப்தேவின் பிறந்தநாளான இன்று தெரிந்துகொள்வோம்.

Radhika Apte: நடிகை ராதிகா ஆப்தே, இந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் நடித்த பிரபல நடிகை ஆவார். நடிகை ராதிகா ஆப்தே, வா லைஃப் ஹோ டூ ஏசி(2005) என்னும் இந்தி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின், 2009ஆம் ஆண்டு பெங்காலி திரைப்படமான ‘ஆண்டஹீன்’ திரைப்படத்தில் நடித்தார். பின்னர், 2015ஆம் ஆண்டு, பாடல்பூர், ஹண்டர், மஞ்சி - தி மவுண்ட்டைன் மேன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். அதன்பின் 2016ஆம் ஆண்டு, போபியா, பார்செட் ஆகியப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதன்பின், நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவான லஸ்ட் ஸ்டோரீஸ், ஸ்கேரெட் கேம்ஸ், கெளல் ஆகியப் படங்களில் நடித்தார். பின்னர், ராத் ஏகேலி ஹை, மோனிகா, ஓ மை டார்லிங் மற்றும் ஏ கால் டூ ஸ்பை, ஆகியப்படங்களில் நடித்தார்.
மேலும் கபாலி என்னும் தமிழ்ப்படத்தில் உச்ச நடிகர் ரஜினியுடனும், பேட் மேன் படத்தில் அக்சய் குமாருடனுடனும், பின், அந்தாதூன் என்னும் காமெடி படத்திலும் ராதிகா ஆப்தே நடித்திருந்தார். இப்படங்கள் அனைத்தும் ஹிட்டாகி ராதிகா ஆப்தேவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.