8 Years of Kabali: காதல் காட்சிகளில் கிளாஸ்.. ஆக்ஷனில் மாஸ்.. மாறுபட்ட சூப்பர் ஸ்டார் படம் கபாலி வெளியாகி 8 ஆண்டுகள்
Rajnikanth: உலகநாயகன் கமல்ஹாசனுக்கு எப்படி நாயகன், வேலுநாயக்கர் கதாபாத்திரமோ, அதேபோல் டார்க் ஷேடில் பல நன்மைகளை செய்யும் கபாலியாக தோன்றியிருப்பார் ரஜினிகாந்த். வழக்கமான ரஜினி படங்களில் இரு்ககும் மாஸ் மசாலா அம்சங்கள் குறைவாகவும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.

கடந்த 2015 ஜூன் மாதம் ரஜினியின் புதிய படத்தை பா. ரஞ்சித் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த நாளில் இருந்தே இந்தப படம் மீதான எதிராபர்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. இதைத்தொடர்ந்து படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் ஆகஸ்டில் வெளியாக இணையத்தை கலக்கியது. தொடர்ந்து கபாலி படம் குறித்த ஒவ்வொரு செய்திகளும் ட்ரெண்டிங்கில் டாப் இடத்தில் இருந்தது.
இதைத்தொடர்ந்து படத்தின் டீசர் 2016 மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில், அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டீசர் என்ற சாதனை பெற்றது. அத்துடன் படத்தின் புரொமோஷன் பணிகளை படத்தயாரிப்பாளர்களை விட ரசிகர்களே செய்ய ஆரம்பித்தார்கள்.
மாஸ் நடிப்பு
ஆரம்பத்தில் ஜூலை 1, ஜூலை என சொல்லப்பட்ட ரிலீஸ் தேதி பின்னர் ஜூலை 22ஆம் தேதி தமிழிலும், தெலுங்கு, இந்தி உள்பட பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. அத்துடன் மலாய் மொழியில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமை கபாலி படத்துக்கே உள்ளது. ரஜினியின் மாஸ் நடிப்பை பார்த்து பழிகிப்போன ரசிகர்களை இந்த படத்தில், அவரது கிளாஸ் நடிப்பு சர்ப்ரைசாகவே இருந்தது.
