தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maharaja Box Office: பெருமூச்சு விடும் விஜய்சேதுபதி.. முதல் வார இறுதியில் சாதனை வசூல்.. மகாராஜா பாக்ஸ் ஆபிஸ் இங்கே!

Maharaja box office: பெருமூச்சு விடும் விஜய்சேதுபதி.. முதல் வார இறுதியில் சாதனை வசூல்.. மகாராஜா பாக்ஸ் ஆபிஸ் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 17, 2024 03:17 PM IST

Maharaja box office: மகாராஜா பாக்ஸ் ஆபிஸ் தொடர்பாக வெளியான போஸ்டரில், இந்த வசூல் மூலமாக, முதல் வார இறுதியில், உலக அளவில் அதிகம் வசூலித்த திரைப்படமாக மகாராஜா திரைப்படம் மாறியிருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. - மகாராஜா பாக்ஸ் ஆபிஸ் இங்கே!

Maharaja box office: பெருமூச்சு விடும் விஜய்சேதுபதி.. முதல் வார இறுதியில் சாதனை வசூல்.. மகாராஜா பாக்ஸ் ஆபிஸ் இங்கே!
Maharaja box office: பெருமூச்சு விடும் விஜய்சேதுபதி.. முதல் வார இறுதியில் சாதனை வசூல்.. மகாராஜா பாக்ஸ் ஆபிஸ் இங்கே!

Maharaja: தமிழ் சினிமாவில்  ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதியின் நடிப்பில், அண்மையில் வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. இந்தப்படத்தின் வசூல் விபரங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கின்றன.

அதன் படி, முதல் வார இறுதி நாளான நேற்றோடு, மகாராஜா திரைப்படம் 32. 6 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இது தொடர்பாக வெளியான போஸ்டரில், இந்த வசூல் மூலமாக, முதல் வார இறுதியில், உலக அளவில் அதிகம் வசூலித்த திரைப்படமாக மகாராஜா திரைப்படம் மாறியிருப்பதாகவும்  குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

விஜய் சேதுபதியின் 50 வது படம்

விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமாக வெளியான இந்தப்படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கியிருக்கிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப், இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். ஒளிப்பதிவு இயக்குனராக தினேஷ் புருஷோத்தமன் பணிபுரிந்துள்ள நிலையில், அஜனீஷ் லோக்நாத் இசை சார்ந்த பணிகளை கவனித்துக்கொண்டார். 

ட்ரெண்டிங் செய்திகள்

பாடல் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுத, எடிட்டராக பிலோமின் ராஜ் பணிபுரிந்துள்ளார். இந்த ஆக்ஷன் படத்தில் ஸ்டண்ட் இயக்குநராக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு பணிபுரிந்துள்ளார். வசனத்தை நித்திலன் சாமிநாதன், ராம் முரளி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இந்தப்படத்தில், விஜய்சேதுபதி உடன் மம்தா மோகன்தாஸ், நட்டி (நட்ராஜ்), பாரதிராஜா, அபிராமி, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

முன்னதாக, மகாராஜா திரைப்படம் புரோமோஷன் தொடர்பாக நடிகை மம்தா மோகன்தாஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில இணையதளத்திற்கு  பேட்டிக்கொடுத்தார். அந்த பேட்டி இங்கே!

 

அவரிடம் திருமணத்தைப் பற்றி கேட்ட போது, “ நான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நான் ஒருவரை பார்த்தேன். நாங்கள் ‘Long Distance’ ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். ஆனால், சில காரணங்களால் அது வொர்க் அவுட் ஆகவில்லை. என்னைப்பொருத்தவரை, ரிலேஷன்ஷிப் என்பது முக்கியமானது. ஆனால், அது இலகுவாக இருக்க வேண்டும்.

நான் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு, ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் கூடுதலான அழுத்தத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நீங்கள் ஒரு முறை, இருமுறை ஏன் மூன்று முறை கூட வாய்ப்பை வழங்கலாம். ஆனால், அதற்கு மேல் சென்றால், உங்களுக்கு மனஅழுத்தம் வந்துவிடும். அதன்பின்னர் அது உங்களுக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ரிலேஷன்ஷிப்பில் இருப்பது உறுதி 

ஆனால், இப்போது நான் ஒருவரை பார்த்திக்கிறேன் ( சிரிக்கிறார்). இந்த உறவில் நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். கல்யாணம் பற்றி யோசிக்கவில்லை.. பார்ப்போம் வாழ்க்கை எப்படி எடுத்து செல்கிறது என்று.. அதைத்தான் நாமும் எதிர்பார்க்கிறோம்.. ஆனால் சில விஷயங்கள் காலப்போக்கில்தான் வெளிவரும்” என்று பேசினார்.

மேலும் பேசிய அவர் "மலையாள திரையுலகை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உணர்கிறேன். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சினிமாத்துறையும் மலையாள சினிமாவை அங்கீகரித்திருக்கிறது. கடந்த காலங்களில் பார்க்கப்படாமலும், பாராட்டப்படாமலும் கடந்து போன பல படங்கள் இப்போது பார்க்கப்படுகின்றன. மக்கள் தற்போது பழைய திரைப்படங்களை தூசித்தட்டி பார்க்கின்றனர்.

அந்த நாளில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், எனக்குள் ஒரு ஆழமான பசி இருந்தது. மலையாள சினிமாவை பொருத்தவரை அவர்களிடத்தில் அதிமான விமர்சனம் இருக்கும். ஆகையால், மலையாள ரசிகர்களிடமிருந்து பாராட்டை பெறும்போது, நீங்கள் ஒரு நல்ல நடிகர் என்ற இடத்தை அடைந்து விட்டீர்கள் என்ற எடுத்துக்கொள்ளலாம். இது வெறும் பார்வை மட்டுமே.. மலையாள சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் படங்கள் உண்மையிலேயே நன்றாக ஓடுகின்றன.” என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: