“அவ வந்தாலே ஒரு வாசம் வரும்.. எங்களுக்கு சண்டையே வராது.. இப்போ வாழவே பிடிக்கல” மனைவி பற்றி உருகிய ஏ.ஆர்.ரஹ்மான்
எனக்கும் என் மனைவிக்கும் எப்போதும் சண்டையே வராது. அவர் வந்தாலே ஒரு வாசம் வரும் என ஏ.ஆர். ரஹ்மான் தன் மனைவி பற்றி மிகவும் உருகி பேசியுள்ளார்.

இந்திய மக்கள் மட்டுமின்றி, உலக மக்களாலும் கொண்டாடப்படுபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தன் இசையாலும், குரலாலும் ஒட்டுமொத்த மக்களையும் கட்டிப் போட்டு வருகிறார்.
விவாகரத்து முடிவு
திரைத்துறையில் எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத, எந்தவொரு கிசுகிசுக்களிலும் சிக்காத ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி தான் இன்று ஒட்டுமொத்த மக்களும் பேசிக் கொண்டிருக்கின்றனர். காரணம். இவரிடம் இருந்து பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக காதல் மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த சமயத்தில் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளியுங்கள் எனக் கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்.
துயரில் மக்கள்
இப்படி, இருக்கையில், ரஹ்மானின் ரசிகர்கள் பலரும் ரஹ்மான் தன் மனைவியுடன் கொடுத்த நேர்காணல்கள், பங்கேற்ற நிகழ்ச்சிகள், புகைப்படங்கள் என ஷேர் செய்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் பெரும்பாலும் ஷேர் செய்வது ஏர்.ஆர் ரஹ்மான் வீக்கெண்ட் வித் ஸ்டார்ஸ் என ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தான்.
