ஏ.ஆர். ரஹ்மான் குரு..பாலசந்தரின் அறிமுகம்..தூர்தர்ஷன் டிவியின் முதல் இசை கலைஞர்! சிரிப்பு வித்தகர் மதன் பாப்
ஏ.ஆர். ரஹ்மான் குரு, மறைந்த இயக்குநர் இயக்குநர் சிகரம் பாலசந்தரின் அறிமுகம், தூர்தர்ஷன் டிவியின் முதல் இசை கலைஞர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரராக இருப்பவர் பன்முக கலைஞன் மதன் பாப். சிரிப்பின் அடையாளமாக மக்கள் மனதில் இருக்கும் மதன் பாப் பிறந்தநாள் இன்று.

நடிகர், இசை கலைஞர், டிவி பிரபலம் என பன்முக திறமையை கொண்டிருக்கும் கலைஞனாக இருந்து வருபவர் மதன் பாப். இடைவிடாது சிரிப்பால் ரசிகர்கள் மத்தியில் அடையாளம் பெற்றிருக்கும் இவர் சினிமாக்களில், காமெடி குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சிறிய காட்சியில் தோன்றினாலும் தானும் சிரித்து, பார்வையாளர்களையும் சிரிக்க வைப்பதில் வல்லவராக இருந்து வருகிறார்.
இசை கலைஞர் டூ சினிமா பயணம்
அடிப்படையில் கிட்டாரிஸ்டான மதன் பாப், ஆரம்பத்தில் சிறு வயதில் விளையாட்டாக இசை கற்றுக்கொண்டுள்ளார். பின்னர் முறையாக அவர் வளர்ந்த காலகட்டத்தில் பிரபலமான இசைகலைஞராக இருந்தவர்களிடம் முறையாக இசையை கற்றுக்கொண்டார்
1975இல் தூர்தர்ஷன் முதல் முறையாக தொடங்கியபோது ஜனாதிபதி உறைக்கு பின்னர் ஒலித்த இசை, மதன்பாப் வாசித்த கிட்டார் இசைதான். இசைகலைஞராக தூர்தர்ஷன், மேடை நாடகம், விளம்பரங்கள், டிவி சீரியல்கள் என இசை கலைஞராக இருந்து வந்துள்ளார்.