பான் இந்தியா ஸ்டார் ஜூனியர் என்டிஆரின் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் வீடியோ..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பான் இந்தியா ஸ்டார் ஜூனியர் என்டிஆரின் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் வீடியோ..

பான் இந்தியா ஸ்டார் ஜூனியர் என்டிஆரின் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் வீடியோ..

Malavica Natarajan HT Tamil
Oct 29, 2024 10:08 PM IST

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஜூனியர் என்டிஆர் தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதை கூறியுள்ளார். இந்த வீடியோவை பலரும் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.

பான் இந்தியா ஸ்டார் ஜூனியர் என்டிஆரின் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் வீடியோ..
பான் இந்தியா ஸ்டார் ஜூனியர் என்டிஆரின் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் வீடியோ..

என்டிஆரின் பேரன் என நிரூபிக்கும் நடிப்பு

நினு சுதானி எனும் படத்தின் மூலம் ஹீரோவாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜூனியர் என்.டி.ஆர், ஸ்டூடன்ட் நம்பர் 1, சிம்ஹாத்ரி போன்ற படங்களில் தனது அசுரத் தனமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார். சிம்ஹாத்ரி படத்தில் இரட்டை வேடத்தால் மட்டுமல்லாமல், தனது மூன்று வேடங்களிலும் நடித்து தன்னை என்டிஆரின் பேரன் என்பதை நிரூபித்திருப்பார்.

தேவாராவில் பட்டையை கிளப்பிய ஜூனியர் என்டிஆர்

பின்னர் தெலுங்கு சினிமாவில் மாபெரும் நடிகராக மாறிய இவர், கடந்த சில ஆண்டுகளாக தனி ஹீரோவாக நடிக்காமல் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்தார். இதையடுத்து, பல ஆண்டுகளுக்குப் பின், அவர் கதாநாயகனாக நடித்த தேவாரா 1 திரைப்படம் வெளியானது. கொரட்டல சிவா இயக்கிய இந்தப் படம் அவர் திரைப்பட வாழ்வில் பெரும் ஹிட் கொடுத்தது. பான் இந்தியா திரைப்படமாக வெளியான தேவாரா 1ல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவர் தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளி ஜூனியர் என்டிஆரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

கேஜிஎஃப் இயக்குநருடன் அடுத்த படம்

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின், இவர் கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த இயக்குநர் பிரசாந்த் நீலுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி, தமிழில் தனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் வெற்றிமாறன். அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதுவும் விரைவில் நிறைவேறும் என வெற்றிமாறன் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

ட்ரெண்டாகும் ஜூனியர் என்டிஆர்

இப்படி, இந்திய சினிமாவில் சில வருடங்களாக அதிகம் பேசப்படும் நடிகராக உள்ள ஜூனியர் என்டிஆரின் வீடியோ ஒன்று தான் இப்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இவர், அந்த வீடியோவில் தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை குறிப்பிட்டுள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் அந்த பழைய வீடியோவை இப்போது ட்ரெண்டாக்கி உள்ளனர்.

தமிழ் மக்களுக்கு வெறும் நடிகராக மட்டுமே தெரிந்த ஜூனியர் என்டிஆர் ஒரு நடன கலைஞரும் கூட. அத்துடன் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.

பிக்பாஸ் சேட்டைகள்

இவர்தான், இந்திய அளவில் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை முதன்முதலாக தெலுங்கில் தொகுத்து வழங்கினார். அந்த சமயத்தில் இவர் செய்த சேட்டைகளும் சம்பவங்களும் தெலுங்கு மக்களால் இப்போது வரை மறக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளனர்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய காலகட்டத்தில், போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள்ளே சென்று விட்டார். பின், அங்குள்ளவர்கள் செய்த சமையலையும் ருசி பார்த்தார். அப்படி அவர் சாப்பிட்டு விட்டு, தெலுங்கு திரைப்படம் ஒன்றில் வரும் வசனத்தை பேசிக் காட்டி போட்டியாளர்களை கிண்டல் செய்துள்ளார்,

ஜூனியர் என்டிஆரின் பேங்க் பேலன்ஸ்

தெலுங்கில் வெளியான சந்தாபாய் எனும் படத்தில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு, அதன் ருசியை புகழ்ந்து தன் வங்கிக் கணக்கில் தற்போது இரண்டு ரூபாய் 30 பைசா இருக்கிறது. அதை சமையல் செய்தத அந்தப் பெண்ணிடம் கொடுங்கள் என்ற வசனம் மிகவும் பிரபலம். அதே வசனத்தை ஜூனியர் என்டிஆர் பேசிக் காட்டி அங்கிருப்பவர்களை கிண்டல் செய்திருப்பார். இந்த வீடியோவை இப்போது அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்கின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.