Janhvi Kapoor: “நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்..தாயருக்கு தந்த அன்பை தாருங்கள்” - சரளமாக தமிழ் பேசிய ஜான்வி கபூர்
Janhvi Kapoor: நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன், என் தாயருக்கு தந்த அன்பை தாருங்கள் என சென்னையில் நடந்த தேவரா 1 செய்தியாளர்கள் சந்திப்பில் சரளமாக தமிழ் பேசிய ஜான்வி கபூர், அனைவரையும் ஆச்சர்யத்தில் உள்ளாக்கினார்.
பாலிவுட் சினிமாவில் இளம் நாயகியாக இருந்து வரும் ஜான்வி கபூர், தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக நடித்த தேவரா பார்ட் 1 படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தெலுங்கில் உருவாகியிருந்தாலும் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் படம் வெளியாகிறது. இதையடுத்து படத்தின் புரொமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற தேவரா செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில் படக்குழுவினர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் ஜான்வி கபூர் தமிழில் பேசிய விடியோ வைரலாகியுள்ளது.
தமிழில் சரளமாக பேசிய ஜான்வி கபூர்
நடிகை ஜான்வி கபூரின் தாயாரும், மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்களிலும், பாலிவுட் சினிமாவிலும் டாப் ஹீரோயினாக இருந்துள்ளார். பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் திருமணம் செய்து கொண்ட இவர், மும்பையிலேயே செட்டிலானார்.
இருப்பினும், தாயார் தாய்மொழியான தமிழ் மொழியை நன்கு பேசிய ஜான்வி கபூர் அனைவரையும் ஆச்சியர்த்தில் உள்ளாக்கினார்.
இந்த நிகழ்வில் தனது தாயார் ஸ்ரீதேவி குறித்து நினைவலைகளை பகிர்ந்த ஜான்வி கபூர், "சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எனக்கு என் அம்மாவிடம் இருக்கும் சிறந்த நினைவலைகள் இங்குதான் உள்ளது.
நீங்கள் அவர் மீது காட்டிய அன்புதான் நானும் என் குடும்பமும் இந்த நிலையில் இருக்க காரணம். அதற்கு நான் எப்போதும் கடமைபட்டிருக்கிறேன். தாயாருக்கு கொடுத்த அதே அன்பை எனக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
ஜான்விகபூரின் இந்த பேச்சுக்கு கைதட்டல்கள் குவித்தன.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, மும்பையில் தனது வீட்டிலும், சென்னைக்கு விடுமுறைக்கு வரும்போதும் தனது மகள்களை தமிழில் பேசுமாறு அறிவுறுத்தியுள்ளாராம். இதன் மூலம் அவரது மகள்கள் நன்கு தமிழ் பேசும் புலமை பெற்றவர்களாக இருக்கிறார்களாம்.
ரசிகர்கள் ரியாக்ஷன்
ஜான்வி தமிழ் பேசிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில், ரசிகர்கள் பலரும் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் கலந்த ரியாக்ஷனை வெளிப்படுத்தியுள்ளனர்.
"ஜான்வி தமிழில் சரளமாக பேசுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்", "அவரது இதயமும் ஆன்மாவும் சென்னையில் நீண்ட காலமாக இருக்கிறது! அம்மா பற்றி எத்தனையோ நினைவுகளால்", இந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம்... வேறு எந்த மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள்?", "அடுத்த நேரடியாக தமிழ் படம் நடிப்பதோடு, டப்பிங்கும் பேசிடலாம்" என பல்வேறு கருத்துகளை ரசிகர்களை பகிர்ந்துள்ளனர்.
ஜான்வி கபூர் புதிய படங்கள்
தேவாரா படம் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜான்வி கபூர், அடுத்து வருண் தவான் ஜோடியாக சன்ஸ்காரி கி துளசி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டில் திரைக்கு வர இருக்கிறது.
தேவாரா படத்தில் தங்கம் என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் தோன்றவுள்ளார். ஏற்கனவே படத்தில் இருந்து வெளியாகியிருக்கும் சிங்கள் பாடல்களில் ஜான்வி கபூரின் நடிப்பு, நடனம், கவர்ச்சி ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழில் யாருக்கு அவர் ஜோடியாக நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/