Bayilvan - 27 முறை நடிகையை ரசித்து சுவைத்த முன்னணி நடிகர் - புயலை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!-an interview with bayilvan ranganathan who talked about the leading actor who enjoyed the actress 27 times - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan - 27 முறை நடிகையை ரசித்து சுவைத்த முன்னணி நடிகர் - புயலை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!

Bayilvan - 27 முறை நடிகையை ரசித்து சுவைத்த முன்னணி நடிகர் - புயலை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!

Marimuthu M HT Tamil
Aug 25, 2024 01:21 PM IST

Bayilvan- 27 முறை நடிகையை ரசித்து சுவைத்த முன்னணி நடிகர் பற்றி புயலை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன் உடைய பேட்டி வைரல் ஆகி வருகிறது.

Bayilvan - 27 முறை நடிகையை ரசித்து சுவைத்த முன்னணி நடிகர் - புயலை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!
Bayilvan - 27 முறை நடிகையை ரசித்து சுவைத்த முன்னணி நடிகர் - புயலை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!

இதுதொடர்பாக கிங் 24X7 யூட்யூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில், ‘’ சினிமாவில் பாலியல் வன்முறைகளை நடிகைகள் அனுபவிப்பவதாக கேரள அரசிடம் நீதிபதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 2017ஆம் ஆண்டு, நடிகர் திலீப்பின் உத்தரவின்பேரில், சில குண்டர்கள் ஒரு நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார்கள் என்று செய்தி வெளியானது. இவ்வழக்கில் 20 பேர் வரை கைதானார்கள். நடிகர் திலீப்பும் கைதாகி பின் ஜாமீனில் வெளியில் வந்தார். இவ்வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை பார்வதி திருவோத்து, கேரள அரசுக்கு தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார். மேலும் இதேபோல், கேரளாவில் பல துணைநடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அறிக்கை அனுப்பியிருந்தார்.

பீதியைக் கிளப்பும் அறிக்கை

அதனைத்தொடர்ந்து இதுபற்றி விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில், விசாரணைக் கமிஷன் போடப்பட்டது. அதன்பின் நீதிபதி ஹேமா கமிஷன் விசாரித்து, 2019ஆம் ஆண்டு அது குறித்த அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்தார். இந்நிலையில் அந்த அறிக்கையில், கேரளாவில் முன்னணி நடிகைகள் மட்டுமல்லாது, துணை நடிகைகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டது. பல துணைநடிகைகள் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் எனக் கருதி, இதனை வெளியில் சொல்லாமல் மறைத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த அறிக்கையால் பல நடிகர்கள் மாட்டிக்கொள்வர் என கருதப்பட்டது. பாதிப்புக்குள்ளானோரின் 5 ஆண்டு கோரிக்கைகளுக்குப் பின், இந்த அறிக்கை வெளியாகி கேரள சினிமா பிரபலங்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.

இந்த அறிக்கையில் முத்தக்காட்சி இருப்பதாக ஆரம்பத்தில் சொல்வதில்லை எனவும், பாதிப் படப்பிடிப்பு ஆனபின் முத்தக்காட்சி இருப்பதாக நடிகைகளிடம் சொல்கிறார்கள். மறுக்கும் நடிகைகளிடம் ஹீரோவை வைத்து வலுக்கட்டாயமாக முத்தக்காட்சிகளை நடிக்க வைத்து நடிகையின் வாயில் காயம் ஏற்படும் வகையில் முத்தக்காட்சிகளை தயாரிப்புக்குழு படமாக்குகிறது. இதுபற்றி நீதிபதி ஹேமா கமிஷன் கண்டனம் தெரிவித்துள்ளது.

வலுக்கட்டாயப்படுத்தி உதட்டில் முத்தம்

ஏற்கனவே பாலியல் புகாருக்கு ஆளான ஒரு கதாநாயகன், ஒரு நடிகையிடம் லிப் லாக் காட்சியில் நடிக்குமாறு கட்டாயப்படுத்தினார். அந்த நடிகை தயங்கினார். இதற்காக ஒரு லிப்லாப் காட்சியில், அந்த நடிகையிடம் 27 முறை அவரது உதட்டை கடித்து ரசித்து சுவைத்திருக்கிறார், அந்த பிரபல நடிகர். இந்தச் சம்பவம் தொடர்பாக, இயக்குநரிடம் அந்த நடிகை புகார் கூறியபோது, அந்த நடிகையை திட்டித்தீர்த்துள்ளார், இயக்குநர். மேலும், அந்த நடிகரால் தான் படம் பிசினஸ் ஆகிறது எனவும், அதெல்லாம் தெரிந்துதானே கதாநாயகியாக நடிக்க வந்தாய் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார், இயக்குநர். போதாக்குறைக்கு அந்த நடிகையை அசிங்க அசிங்கமாய் திட்டித் தீர்த்திருக்கிறார், தயாரிப்பாளர்.

நடிகையின் பிடிவாதம் காரணமாக, அந்தப் படத்தில் கதையின் நாயகனும், கதையின் நாயகியும் திருமணம் செய்துகொள்வதுபோல் காட்சி அமைக்கப்பட்டது. கணவன் - மனைவி என்றால் படுக்கையறைகள் காட்சிகள் அதிகமிருக்கும். கணவன் என்றால் மனைவியை இயற்கையாகவே உதட்டில் முத்தமிட சட்டப்படி உரிமை இருக்கிறது. இதன்காரணமாக, திரைக்கதையில் இருக்கிறதோ, இல்லையோ, அந்த நடிகையை வலுக்கட்டாயப்படுத்தி உதட்டில் முத்தம் கொடுப்பாராம், அந்த நடிகர்.

சினிமாவில் ஒரு நடிகை நடிக்கிறார் என்றால் பணமும் வேண்டும்; புகழும் வேண்டும். என்னதான் நடிகைகள் பணத்திற்காக நடிக்கிறார் என்றாலும், வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தால், அந்த நடிகைகள் என்ன செய்வார்கள், யாரிடம்போய் சொல்வார்கள். ஏனென்றால், நடிகர்களின் விருப்பம் தான், இங்கே வரவேற்கப்படுகிறது தவிர, நடிகைகளின் எதிர்ப்பினை யாரும் கண்டுகொள்வதே. இதனால், அந்த நடிகைகள் தங்கள் பிரச்னைகளை அழுது புலம்பி யாரிடமும் சொல்லாமல் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கின்றனர் என நீதிபதி ஹேமா அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இப்படி இருக்கையில், நடிகைகள் படுக்கைக்கு இணங்க மறுத்துவிட்டால், நடிகைகள் குறித்து வதந்திகளைக் கிளம்புகின்றனர், தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள். குறிப்பாக, அதிக சம்பளம் கேட்கிறார், கேரவன் கேட்கிறார் என்றெல்லாம் வதந்திகளைக் கிளப்புகின்றனர். இப்படியெல்லாம் செய்து சம்பந்தப்பட்ட நடிகைகளை சினிமாவைவிட்டே அப்புறப்படுத்திவிடுகின்றனர். இதன் காரணமாக கேரள சினிமாவில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து உள்ளது என நீதிபதி ஹேமா கூறியுள்ளார். இந்தியாவில் தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கையின்படி, இந்தியாவில் தினசரி 86 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பார்த்தால் ஒரு மணிநேரத்துக்கு 4 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்’’ என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

நன்றி: கிங் 24X7 யூட்யூப் சேனல்!

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.