Burning Calories Tips: கட்டிப்பிடி வைத்தியம், ஆழ்ந்த முத்தம்..உடற்பயிற்சியே இல்லாமல் கலோரிகளை எரிக்க எளிய வழிகள் இதோ-follow these unique ways to burn calories without exercise - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Burning Calories Tips: கட்டிப்பிடி வைத்தியம், ஆழ்ந்த முத்தம்..உடற்பயிற்சியே இல்லாமல் கலோரிகளை எரிக்க எளிய வழிகள் இதோ

Burning Calories Tips: கட்டிப்பிடி வைத்தியம், ஆழ்ந்த முத்தம்..உடற்பயிற்சியே இல்லாமல் கலோரிகளை எரிக்க எளிய வழிகள் இதோ

Aug 20, 2024 11:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 20, 2024 11:00 AM , IST

  • எடைகுறைப்புக்கு பல்வேறு வகையான உடற்பயிற்சியும், டயட் முறையும் பலரும் பின்பற்றுகிறார்கள். ஆனால் இவை இல்லாமல் எளிய முறையில் கலோரிகளை எரிக்க உதவும் வழிகளை பார்க்கலாம்

எடை குறைப்புக்கு அத்தியாவசியமான விஷயமாக கலோரி எரிப்பு அல்லது கலோரி குறைப்பு இருந்து வருகிறது. உடற்பயிற்சி, டயட் முறையால் இதை சாத்தியமாக்கலாம். ஆனால் இந்த இரண்டு முறைகளும் இல்லாமல் அன்றாட வாழ்க்கை முறை விஷயங்களை செய்வதன் மூலமும் அடையலாம் என்பது பலருக்கு தெரியாது

(1 / 6)

காமெடி நிகழ்ச்சிகள் பார்ப்பது: வேடிக்கையான காமெடி நிகழ்ச்சி, ஸ்டாண்டப் காமெடி நிகழ்ச்சி போன்றவற்றை பார்ப்பதன் மூலம் வாய் விட்டு சிரிப்பது மனதுக்கு நன்மை தருவதோடு மட்டுமல்லாமல் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. இது லேசான உடற்பயிற்சியைப் போலவே. அதிகமாக சிரிப்பதால் இதயத் துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் நுகர்வு அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது

(2 / 6)

கட்டிப்பிடி வைத்தியம்: பார்டனர், காதலருடன் சூடான அணைப்பு, அரவணைப்புகள் ஆறுதல் மட்டுமல்ல, கலோரிகளை எரிக்க ஒரு வழியாகவும் இருக்கிறது. பகலில் உங்கள் அன்புக்குரியவரை சில முறை கட்டிப்பிடிப்பதால் கிட்டத்தட்ட 70 கலோரிகள் எரிக்கப்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டிப்பிடிப்பது உங்கள் இதயத் துடிப்பை உயர்த்துகிறது மற்றும் ஆக்ஸிடாஸின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இது பிணைப்பு உணர்வுகளை ஊக்குவிக்கிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. எனவே, உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதால் கட்டிப்பிடிப்பதை கடைப்பிடிக்கவும்

(3 / 6)

முத்தங்கள் பரிமாறுதல்: உணர்ச்சி பெருக்குடன் முத்தமிடுவது கலோரிகளை எரிப்பதில் வியக்கத்தக்க வகையில் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. இது உடல் நெருக்கம் மற்றும் மன நெருக்கத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் இதயத் துடிப்பை உயர்த்துவதோடு, பல முக தசைகளை ஈடுபடுத்துகிறது. எனவே முத்தம் என்பது காதல் உணர்வில் வெளிப்பாடு  மட்டுமல்லாமல் கலோரிகளை எளிய வழியில் எரிக்கும் வழியாகவும் உள்ளது

(4 / 6)

வளர்ப்பு பிராணியுடன் விளையாட்டு: உங்கள் வீட்டு வளர்ப்பு பிராணிகளுடன் விளையாடுவது வேடிக்கையானது மட்டுமல்ல, கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. நாய் வைத்திருப்பவர்கள் பந்தை எறிந்து விளையாடுவது, நடைப்பயிற்சிக்கு செல்வது போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் உங்களை உடல் அசைவுகளை வெளிப்படுத்த உதவுகிறது. உங்கள் தினசரி ஆற்றல் செலவினத்தை அதிகரிக்கிறது. எடை அதிகரிப்புக்கான காரணங்களில் ஒன்றான மன அழுத்தத்தைக் குறைக்கவும் இது ஒரு சிறந்த வழியாகும்

(5 / 6)

குளிக்கும்போது பாடல் பாடுவது: நீங்கள் பாடல் பாடுவதில் விருப்பம் உடையவராக இருந்தால், சத்தமாகப் பாடுங்கள். ஏனெனில் அது கலோரிகளை எரிக்க உதவுகிறது. நீங்கள் பாடும் போது, ​​உங்கள் மார்பு, வயிறு மற்றும் முகத்தில் பல்வேறு தசைகளை ஈடுபடுத்துவீர்கள். மேலும், பாடுவது உங்கள் மனநிலையை உயர்த்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது

(6 / 6)

மற்ற கேலரிக்கள்