தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amudhavum Annalakshmiyum : அன்னத்துக்கு அதிர்ச்சி கொடுத்த அமுதா.. அசிங்கப்படுத்தும் வடிவேலு!

Amudhavum Annalakshmiyum : அன்னத்துக்கு அதிர்ச்சி கொடுத்த அமுதா.. அசிங்கப்படுத்தும் வடிவேலு!

Divya Sekar HT Tamil
Jun 03, 2023 12:20 PM IST

அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து காணலாம்.

அமுதாவும் அன்னலட்சுமியும்
அமுதாவும் அன்னலட்சுமியும்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அமுதா வேலைக்கு போக கூடாது என அன்னலட்சுமி சொன்ன நிலையில் கதிரேசன் மாமா முடிவை சொல்லட்டும் என அமுதா பதில் கொடுத்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வடிவேலு இரண்டு சீட்டுகளை எடுத்து வர மாணிக்கம் உன்னை நாங்க எப்படி நம்புறது என சொல்லி அந்த இரு சீட்டுகளையும் பிரிக்க போக, அன்னம் என் பையனை இன்னும் நம்ப மாட்டேங்குறீங்களல்ல என கோபமடைகிறாள்.

அதன் பிறகு அன்னலட்சுமி இரு சீட்டுகளையும் குலுகி போட்டு ஒரு சீட்டை எடுத்து பிரிக்க போக அது காற்றில் பறந்து சென்று தூபக் கரண்டியில் விழுந்து எறிகிறது. மற்றொரு சீட்டை எடுத்துப் பார்க்க, அதில் வேலைக்கு செல்ல வேண்டாம் என எழுதி இருக்க மாணிக்கம் அப்ப அக்கா எடுத்த சீட்டுல வேலைக்கு போலாம்னு தான எழுதி இருக்கும் என சொல்ல , அமுதா சந்தோஷம் அடைகிறாள்.

ஆனாலும் அன்னம் அமுதாவை வேலைக்கு போக கூடாது என சொல்லி அவள் முன்னால் ஒரு துண்டை போட அமுதா துண்டை தாண்டி வேலைக்கு செல்ல அன்னம் ஷாக் ஆகிறாள். மாமாவோட கனவை நிறைவேத்துறதுக்காக தான் நான் அந்த பதவிக்கு வந்தேன். அதை விட மாட்டேன் என சொல்லி விட்டு செல்கிறாள். அதன் பிறகு அமுதா கோவிலுக்கு சென்று கடவுளிடம் வருந்த செந்தில் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான்.

இதனை தொடர்ந்து அமுதா கோவிலில் இருந்து வெளியே வந்து ஆட்டோவுக்காக வெயிட் செய்ய அங்கு சிதம்பரம் வர அமுதா அப்புச்சியை கட்டிப் பிடித்து அழுகிறாள். அவர் என் பிள்ளையை ஊர்க்காரங்க பெருமையா பேசும் போது தனக்கு சந்தோஷமாக இருப்பதாக சொல்கிறார். அன்னலட்சுமி தன்னை வேலைக்கு போக வேண்டாம் என சொன்னதை சொல்ல சிதம்பரம் அவளிடம் நான் உன் மாமியார் கிட்ட பேசுறேன் என சொல்கிறார்.

இதையடுத்து சிதம்பரம் செந்தில் வீிட்டிற்கு வர வடிவேலு அவரை அவமானபடுத்தி தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்