Alai Payuthey: ‘என்றென்றும் புன்னகை’ மாதவன் ஷாலினி காம்போவில் கலங்கிய அலைபாயுதே.. மாதவனுக்கு ஃபஸ்ட் ஷாலினிக்கு லாஸ்ட்!
Alai Payuthey:கடந்த 2000 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான ரொமான்டிக் மூவி. திரைக்கதை எல்லா காலங்களிலும் பொருந்திப் போனதுதான் வின்னிங் பார்முலா. காதல் படங்களை ரசிக்க வைக்ககூடிய மணிரத்னம் இந்த படத்தில் எடுத்து கொண்ட காதல் சினிமாவில் புதுசு கண்ணா புதுசு டைப்.
அலை பாயுதே திரைப்படம் இன்னும் இருபத்திநான்கு ஆண்டுகள் கடந்தும் இன்னும் அலை பாயுதே.. எல்லா ஜீவனுள்ளும் காதல் அலை பாயுதே.
கடந்த 2000 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான ரொமான்டிக் மூவி. திரைக்கதை எல்லா காலங்களிலும் பொருந்திப் போனதுதான் வின்னிங் பார்முலா. காதல் படங்களை ரசிக்க வைக்ககூடிய மணிரத்னம் இந்த படத்தில் எடுத்து கொண்ட காதல் சினிமாவில் புதுசு கண்ணா புதுசு டைப். வழக்கம் போலவே திரைக்கதை தான் பலம்.
காதலர்களின் காதலுக்கு முன்.. காதலுக்கு பின் என்று இரண்டு அத்தியாயங்களை இரண்டு குடும்பங்களின் பின்னணியில் மிக இயல்பாக அமைக்கப்பட்ட திரைக்கதை. நடிகர் மாதவன் வாழ்வில் சினிமா அலைகளை ஆரம்பித்து வைத்த முதல் திரைப்படம்.
அறிமுக ஹீரோ மாதவன் கார்த்திக் சாப்ட்வேர் இன்ஜினியராகவும், ஷாலினி டாக்டர் சக்தியாகவும், ஜெயசுதா சரோஜாவாகவும், பிரமிட் நடராஜன் வரதராஜனாகவும், சொர்ணமால்யா பூரணியாகவும், விவேக் சேதுவாகவும், லலிதா கார்த்திக் அம்மாவாக நடித்துள்ளனர்.
கிராமத்தில் நடைபெறும் நண்பனின் திருமண நிகழ்வுக்காக செல்லும் மாதவன் அங்கு ஷாலினியை சந்தித்து விட்டு ஊருக்கு திரும்பிய பின்னர் ரயில் பயணம் இவர்கள் காதலையும் ஆரம்பித்து வைக்கிறது. வசதியான குடும்பத்தை சேர்ந்த இன்ஜினியர் மாதவன். தன் நண்பர்களுடன் சேர்ந்து ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை நடத்துபவர். சக்தியாக வரும் ஷாலினி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி.
மாதவன் சக்தியை விரும்பிய போதிலும் சக்தி தயங்குகிறார். ஆனாலும் காதலை மனதில் இருவரும் உணர்வுபூர்வமாக புரிந்து கொண்டு இரண்டு வீட்டில் இருக்கும் பெற்றோருக்கு தெரியாமலேயே திருமணம் முடிக்கின்றனர். திருமணம் முடிந்த பிறகு அவரவர் வீட்டில் வாழ்க்கையை தொடர்கின்றனர். இந்த பந்தத்தை நீண்ட காலம் எடுத்து செல்ல முடியாது என்ற நிலையில் இருவரும் தங்களது சொந்த வீட்டை விட்டு வெளியேறி அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்குவார்கள். திருமணம் முடிந்த பிறகு இயல்பான வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதானதல்ல என்று உணருகிறார்கள். வாழும் வாழ்க்கையில் இருவருக்குள்ளும் முரண்பாடுகள் சிரமங்கள் என்று திரைக்கதை கட்டமைப்பு மிகவும் கச்சிதமாக நகரும். ஒருவரின் கோபத்தை வெறுப்பாக புரிந்து கொள்ள கூடாது என்பதையும் சிறந்த நடிப்பில் உணர்த்தும் அழகே தனி.
படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவருக்கு இது ஐம்பதாவது படம். பத்து பாடல்களையும் வைரமுத்து வரிகளை கொண்டு இசையில் நம்மை மயங்க வைத்திருப்பார். பிலிம்பேர் விருதையும் இந்த படத்துக்கு பெற்றார்.
"அலை பாயுதே கண்ணா.. " இந்த பாடல் வரிகள் மட்டும் ஊத்துக்காடு வேங்கடகவி அவர்களுடையது.
"என்றென்றும் புன்னகை"
"எவனோ ஒருவன்"
"காதல் சடுகுடு"
"பச்சை நிறமே"
"சிநேகிதனே.. சிநேகிதனே"
"யாரோ யாரோடி"
"மாங்கல்யம்"
"செப்டம்பர் மாதத்தின்"
என்று ஒவ்வொரு பாடலும் இனிமை சொட்டும்.
இந்த படத்தில் இன்னொரு பலம் ஒளிப்பதிவு செய்துள்ள பி.சி.ஶ்ரீராம். காட்சிகள் எல்லாம் கண்களுக்கு அத்தனை குளுமை. இவரும் பிலிம்பேர் விருது பெற்றார். சிறந்த அறிமுக நடிகருக்கு மாதவன் பிலிம்பேர் விருது பெற்றார். ஷாலினி சிறந்த நடிகையாக தமிழக அரசால் தேர்வானார். இதே படம் தெலுங்கில் சகி என்ற பெயரிலும் இந்தியில் சாதியா என்ற பெயரில் ரீமேக் ஆனது . மாதவனுக்கு முதல் படமாக அமைந்தாலும் ஷாலினிக்கு கடைசி படமாக அமைந்தது.
சகியே சினேகிதியே..
காதலில் காதலில் காதலில் காதலில் நிறமுண்டு சகியே சினேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு ஓஹோ..
பச்சை நிறமே...பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே.. புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே..
அலை பாயுதே.. இருபத்தி நான்கு ஆண்டுகள் கடந்தும் அலை பாயுதே... ஓயாத அலைகள் இன்னும் மனதில் அலையடிக்கிறதே.. நினைவுகளாய்.. அலை பாயுதே..
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்.. போன்ற பாடல்கள் இன்றைய இளைஞர்களையும் முணுமுணுக்க வைப்பது தான் படத்தின் வெற்றி எனலாம்.
டாபிக்ஸ்