Story of Song : கடும் கோபத்தில் வைரமுத்து.. 10 நிமிடத்தில் டியூன் போட்ட ஏ. ஆர். ரகுமான்.. கண்ணுக்கு மை அழகு பாடல் கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Story Of Song : கடும் கோபத்தில் வைரமுத்து.. 10 நிமிடத்தில் டியூன் போட்ட ஏ. ஆர். ரகுமான்.. கண்ணுக்கு மை அழகு பாடல் கதை!

Story of Song : கடும் கோபத்தில் வைரமுத்து.. 10 நிமிடத்தில் டியூன் போட்ட ஏ. ஆர். ரகுமான்.. கண்ணுக்கு மை அழகு பாடல் கதை!

Divya Sekar HT Tamil
Jan 21, 2024 05:45 AM IST

Story of Song : புதிய முகம் படத்தில் இடம்பெற்ற கண்ணுக்கு மை அழகு பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

புதிய முகம் படத்தில் இடம்பெற்ற கண்ணுக்கு மை அழகு பாடல் உருவான கதை
புதிய முகம் படத்தில் இடம்பெற்ற கண்ணுக்கு மை அழகு பாடல் உருவான கதை

பிளாஸ்டிக் சர்ஜரி என்ற அறுவை சிகிச்சை உடலில் உள்ள தோல் பகுதியை, எடுத்து சிதைவு ஏற்பட்ட முக பகுதியில் பொருத்தி கொள்வதுடன், தேவைப்பட்டால் முக அமைப்பையும் மாற்றிக்கொள்ளும் சிகிச்சையாக இருந்து வருகிறது. இந்த கான்செப்ட்டை வைத்து புதியமுகம் கதை அமைந்திருக்கும்.

இப்படத்தில் இடம்பெற்ற கண்ணுக்கு மை அழகு பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

”கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு

கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண்ணழகு

கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு

கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண்ணழகு

இளமைக்கு நடையழகு முதுமைக்கு நரை அழகு

கள்வர்க்கு இரவழகு காதலர்க்கு நிலவழகு

நிலவுக்கு கரையழகு பறவைக்கு சிறகழகு

நிலவுக்கு கரையழகு பறவைக்கு சிறகழகு

அவ்வைக்கு கூன் அழகு அன்னைக்கு சேய் அழகு

விடிகாலை விண்ணழகு விடியும் வரை பெண்ணழகு

நெல்லுக்கு நாற்றழகு தென்னைக்கு கீற்றழகு

ஊருக்கு ஆறழகு ஊர்வலத்தில் தேரழகு

ஊருக்கு ஆறழகு ஊர்வலத்தில் தேரழகு

தமிழுக்கு ழா அழகு தலைவிக்கு நானழகு”

'கண்ணுக்கு மை அழகு' பாடல் வரியை எழுதி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் தனக்குள்ளேயே வைத்திருந்தாராம் வைரமுத்து. முதலில் எம்.எஸ்.வியிடம் போய் காட்டியிருக்கிறார், ஆனால் எம்.எஸ்.விக்கு அந்த பாடல் பிடிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டதாம். 

அதன் பிறகு, ஷங்கர் கணேஷ், ஷ்யாம் என பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் அந்த பாடலை கொண்டுபோய் காட்டியிருக்கிறார் .

ஆனால் அனைவருமே பிடிக்காமல் நிராகரித்து விட்டனராம். அதன் பிறகு, சுரேஷ் மேனன் ‘புதிய முகம் என்ற படத்தை எடுக்கிறோம், உடனடியாக ஒரு பாடல் வேண்டும்’ என்று வைரமுத்துவிடம் சொல்லியிருக்கிறார்.உடனே, தன்னிடம் இருந்த 'கண்ணுக்கு மை அழகு' என்ற பாடல் வரியை கொடுத்திருக்கிறார்.

சரியாக 10 நிமிடங்களில் ஏஆர் ரஹ்மான் மெட்டு போட்டு கொடுத்து மாபெரும் ஹிட்டான பாடல்தான் 'இந்த கண்ணுக்கு மை அழகு' பாடல்.

அதேபோல இந்த படத்தில் இணை இயக்குனராக இருந்த கே எஸ் அதியமான் இந்த பாடல் வரிகளை பார்த்துவிட்டு அதில் ஒரு வரியை மட்டும் சுழித்து கொடுத்து உள்ளார். பொதுவாக பாடல் வரிகளில் இதுபோன்று சுழித்தால் மீண்டும் பாடல் ஆசிரியரிடம் அந்த பாடல் சென்று அதில் உள்ள பிழைகளை நீக்கி மறுபடியும் பாடல் முழுமை பெறும் இதுதான் வழக்கம், அதே போல தான் அன்று மீண்டும் இந்த பாடல் வரிகள் வைரமுத்துவிடம் சென்றுள்ளது.

இதை பார்த்து வைரமுத்துவுக்கு கடும் கோபம். உடனே அந்தக் கோபத்திலேயே அதியமானை தொலைபேசியில் அழைத்து அலுவலகத்திற்கு வர சொல்கிறார். அங்கு சென்ற அதிகமானிடம் வைரமுத்து கோபமாக நீ சுழித்தது எல்லாம் ஓகே இதில் உனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என கேட்கிறார். 

அதற்கு அதியமான் அதில் விடிகாலை விண்ணழகு விடியும் வரை பெண்ணழகு என எழுதி உள்ளீர்கள். இதில் விடிகாலை விண்ணழகு சரி ஐயா ஆனால் விடியும் வரை பெண்ணழகு எப்படி ஐயா வரும் அதாவது விடிந்த பிறகு தானே பெண் அழகு அப்படித்தானே வரும் என அதியமான் கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த வைரமுத்து உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்கிறார். அதற்கு அதியமான் இல்லை என சொல்கிறார். கல்யாணம் ஆன பிறகு உனக்கு அது புரியும் என வைரமுத்து சொல்கிறார். அதேபோல உனக்கு இந்தப் பாடலில் இந்த வரி சரியில்லை இந்த காட்சிக்கு இந்த வரி பொருந்தவில்லை என நினைத்தால் அதை சுழிக்காதீர் அது என் கழுத்தைப் பிடிப்பது போன்ற ஒரு உணர்வு. 

எனவே இனிமே இந்த மாதிரி வரிகளில் பிழையோ அல்லது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் என்னிடம் சொல் நான் அதை மாற்றித் தருகிறேன் என கூறியுள்ளார். பின்னர் அதியமான் அந்த வரிதான் சரி என உணர்ந்து அப்படியே பாடல் வெளியாகி உள்ளது.இப்படி தான் இப்பாடல் உருவானது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.