தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பிறப்பிலேயே காதல் செட்டாகாத ராசிகள்.. அதிர்ஷ்டம் கிடையாது.. எப்போதும் சிக்கல்தான்.. போய்டாதீங்க

பிறப்பிலேயே காதல் செட்டாகாத ராசிகள்.. அதிர்ஷ்டம் கிடையாது.. எப்போதும் சிக்கல்தான்.. போய்டாதீங்க

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 04, 2024 05:54 PM IST

Unlucky Love: பிறப்பிலேயே அவர்களின் ஜாதகத்தை பொறுத்த அளவில் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. அந்த வகையில் காதல் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இல்லாத சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

காதல் வாழ்க்கை
காதல் வாழ்க்கை

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணாதிசயத்தை கொண்டிருப்பார்கள் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஏதோ ஒரு கிரகம் அதிபதியாக திகழ்ந்தவர். இயல்பிலேயே தங்களது தனித்துவமான குணாதிசயத்தை பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கு கொண்டிருந்தாலும் அவர்களின் அதிபதியாக விளங்கக்கூடிய கிரகங்களின் அடிப்படையில் ஒரு சில ராசிகள் சிறப்பான குணாதிசயத்தை பெற்றிருப்பார்கள். சில சிறப்பான பலன்கள் அவர்களுக்கு எப்போதும் கிடைக்கும்.

அந்த வகையில் அனைவருக்கும் காதல் வாழ்க்கை மிகவும் தேவையான ஒன்று இருப்பினும் சில ராசிகளுக்கு காதல் வாழ்க்கை சிறப்பாக அமைவது கிடையாது. பிறப்பிலேயே அவர்களின் ஜாதகத்தை பொறுத்த அளவில் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. அந்த வகையில் காதல் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இல்லாத சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மகர ராசி

 

நீங்கள் ஒழுக்கத்திற்கு பெயர் பெற்றவர்கள் இயல்பாகவே உங்களுக்கு லட்சியப்போக்கு அதிகமாக இருக்கும். உங்களுக்கு தனித்துவமான குணாதிசயங்கள் நீங்கள் உண்டாக்கிய திட்டத்தின் அடிப்படையில் செயல்படும். பல சமயங்களில் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைத்தாலும் காதல் நோக்கங்கள் எப்போதும் வெற்றி அடைவது கிடையாது. எப்போதும் உங்களது இலக்கை நோக்கி பயணம் செய்யக்கூடியவர்கள் நீங்கள். முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு காதல் வாழ்க்கை அவ்வளவு எளிதில் அமைந்து விடாது. நேரம் ஒதுக்குதல் என்பது காதல் வாழ்க்கையில் மிகவும் அவசியமாகும். அதில் அலட்சியம் காட்டுகின்ற காரணத்தினால் உங்களுக்கு அமைவது சாத்தியமற்றது.

கும்ப ராசி

 

சுதந்திரமான சிந்தனை கொண்டவர்களாக தனித்துவ குணத்தோடு வாழக்கூடியவர்கள் நீங்கள். மற்றவர்களை புரிந்து கொண்டு புகழ் பாராட்டக்கூடிய ஒருவராக நீங்கள் இருப்பதில் ஒரு மிகப்பெரிய சவால் இருந்து வருகிறது. உங்களுடைய சுதந்திரம் உங்களுடைய செயலில் மட்டுமே முன்னுரிமை கொடுத்து செயல்படுகின்ற காரணத்தினால் மற்றவர்களுக்கு நீங்கள் எளிதில் இடம் கொடுத்து விட மாட்டீர்கள். அதன் காரணமாக உங்களுக்கு காதல் வாழ்க்கை அவ்வளவு எளிதில் அமர்ந்து விடாது.

கன்னி ராசி

 

சிறிய விஷயங்களிலும் நீங்கள் அதிக கவனம் செலுத்தி அதனை முழுமையாக கூடிய திறன் கொண்டவர்கள் நீங்கள். அனைத்திலும் கவனம் செலுத்துகின்ற காரணத்தினால் உங்களுக்கு காதல் வாழ்க்கை சிக்கலாக அமையும். சிறு சிறு விஷயங்களிலும் நீங்கள் கவனம் செலுத்துவது மற்றவர்களை எரிச்சல் ஊட்டும். நன்மைகள் மட்டுமல்லாது தீமைகளிலும் நீங்கள் அதிகம் கவனம் செலுத்தி அதனை நீங்கள் சுட்டிக் காட்டும் பொழுது அது வாழ்க்கை துணை மற்றும் காதல் வாழ்க்கையை சிக்கலாக மாற்றும். விமர்சனத்திற்கு பெயர் போன உங்களால் காதல் வாழ்க்கையில் எளிதில் ஈடுபட முடியாது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel