காதலனை அறிமுகப்படுத்திய நடிகை..அஜித்குமார் ரேஸிங் அணியின் இணையத்தளம் - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்
காதலனை அறிமுகப்படுத்திய நடிகை, மீண்டும் அம்மாவாகும் நடிகை எமி ஜாக்சன், பிளாக் ஓடிடி ரிலீஸ், அஜித்குமார் ரேஸிங் அணியின் இணையத்தளம் உள்பட இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்

தீபாவளி ரிலீஸாக நான்கு படங்கள் வந்திருக்கும் நிலையில் அவற்றின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் இன்று வெளியாகியுள்ளன. இதற்கிடையே இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்
மீண்டும் அம்மாவாகிறார் எமி ஜாக்சன்
பிரிட்டனில் மிஸ் டீன் பட்டம் வென்ற எமி ஜாக்சன், தமிழில் மதராசபட்டினம் படம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, தமிழ், பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்து தாயானார். இதன் பின்னர் பாய்பிரண்டை திருமணம் செய்து கொண்ட எமி தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். தனது கணவருடன் கர்ப்பம் தரித்த லுக்கில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வைரலாகியுள்ளார்.
கேப்டன் பிரபாகரன் 2 படத்துக்கு ரெடி -மன்சூர் அலிகான்
கடந்த 1991இல் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்தின் 100வது படமாக வெளியான கேப்டன் பிரபாகரன் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இந்த படத்தில் வில்லனாக நடித்த மன்சூர் அலிகான் தனது இன்ஸ்டா பக்கத்தில் குதிரை சவாரி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து "கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 நான் ரெடி. சண்முக பாண்டியன் ரெடியா? இந்த படத்தை ஆர்.கே. செல்வமணி மட்டும்தான் இயக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கேப்டன் பிரபாகரன் 2 மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளார்.