பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளையராஜா பயோபிக் என்ன ஆனது? வெளியான அதிர்ச்சி தகவல்!
தேனி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து இன்று பலமொழித் திரை உலகின் இசைஞானியாக திகழும் இளையராஜாவின் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது.
தேனி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து இன்று பலமொழித் திரை உலகின் இசைஞானியாக திகழும் இளையராஜாவின் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. 1976 ஆம் ஆண்டு முதல் அன்னக்கிளி படத்தில் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இளையராஜா. அதனை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். இவரது இசையை இன்று வரை பல ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது எனக்கு கூறலாம் அந்த அளவிற்கு இசைஞானம் உடையவர் இளையராஜா. பல விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆகவும் உள்ளார்.
இளையராஜா கடந்த பல வருடங்களாக தனது இசையால் உலகில் உள்ள அனைத்து தமிழர்கள் மட்டுமல்லாது பல மொழி பேசுபவர்களையும் கட்டி போட்டு உள்ளார். இத்தகைய இசைக்கு ராஜாவாக திகழும் இளையராஜாவின் வாழ்க்கையை படமாக எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த படத்தில் இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருந்தார். மேலும் இது குறித்தான போஸ்டர்களும், அறிவிப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே வெளிவந்தவாறு இருந்தன. இப்படத்தினை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக இருந்தது.
பிஸியான தனுஷ்
இப்படம் குறித்தான அறிவிப்புகள் கடந்து சில மாதங்களுக்கு முன்பிருந்தே வந்தவண்ணம் இருந்தன. இப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் தனுஷ் நிற்பது போன்ற முதல் போஸ்டரும் வெளியானது. மேலும் அதனைத் தொடர்ந்து தனுஷ் அவரது இயக்கத்தில் ராயன் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் அதனைத் தொடர்ந்து தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். மேலும் இட்லி கடை என்ற படத்தையும் இயக்க உள்ளார். இந்நிலையில் தொடர்ந்து பிசியாக உள்ள தனுஷ் தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார். நாகார்ஜுனா உடன் இணைந்து குபேரா எனும் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் பணியாற்றி வரும் அனைத்து படங்களின் அப்டேட்களும் வரிசையாக வந்த வண்ணம் உள்ளன. ஆனால் தனுஷ் கமிட் ஆகிய இளையராஜாவின் பயோபிக் படம்குறித்து இன்று வரை எந்தவிதமான அப்டேட்டுகளும் வராமல் அப்படியே நின்று விட்டது.
தயாரிப்பு நிறுவனம் குழப்பம்
இளையராஜாவின் பயோபிக் படத்தை மும்பை நிறுவனத்துடன் சேர்ந்து இளையராஜாவும் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு ஒப்பந்தமாகி இருந்த மும்பையை சேர்ந்த நிறுவனம் படத்தில் இருந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதன் காரணமாக இந்த படம் கைவிடப்பட்டதா என்ற குழப்பம் நிலவுகிறது மேலும் கோலிவுட் வட்டாரங்களில் இப்படம் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளது பேசு பொருளாகி ஆகியுள்ளது.
டாபிக்ஸ்