Mansoor Ali Khan: ’நான் ஏன் ரேப் கேஸில் உள்ளே போனேன்..’: முதல்முறையாக மனம்திறந்த நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி-why did i go into the rape case says actor mansoor alikhan interview for the first time - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mansoor Ali Khan: ’நான் ஏன் ரேப் கேஸில் உள்ளே போனேன்..’: முதல்முறையாக மனம்திறந்த நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி

Mansoor Ali Khan: ’நான் ஏன் ரேப் கேஸில் உள்ளே போனேன்..’: முதல்முறையாக மனம்திறந்த நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி

Marimuthu M HT Tamil
Sep 08, 2024 01:40 PM IST

MansoorAliKhan: ’நான் ஏன் ரேப் கேஸில் உள்ளே போனேன்..’ என்று முதல்முறையாக மனம்திறந்த நடிகர் மன்சூர் அலிகான் அவர்களின் பேட்டி வெளியாகியுள்ளது.

Mansoor Ali Khan: ’நான் ஏன் ரேப் கேஸில் உள்ளே போனேன்..’: முதல்முறையாக மனம்திறந்த நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி
Mansoor Ali Khan: ’நான் ஏன் ரேப் கேஸில் உள்ளே போனேன்..’: முதல்முறையாக மனம்திறந்த நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி

நடிகர் சங்க ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க நடிகர் மன்சூர் அலிகான் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம்பேசிய அவர், ‘’சினிமாவில் சகோதரிகள், பெண்கள், கதாநாயகிகள் என் கூட நடிக்கிறவர்கள் எல்லாமே என் குடும்பம். பெண்களுக்கு ஒரு அவமானம் என்றால், அதற்கு முழுக்காரணம், அதில் நடிக்கிறவர்கள் தான். எங்க குடும்பம் தான். அதனால் கேரளாவில் நடக்குது, இங்க நடக்கவில்லை அப்படின்னு கேட்கக்கூடாது. உங்கள் வீட்டில் திருடுபோனவுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் கொடுக்கிறீர்கள். அப்போது போலீஸ் எப்போது திருட்டுப்போச்சு என்று கேட்பார்கள் தானே. 18 வருஷத்துக்கு முன்னாடி என்று சொன்னால் பளார் என்று ஒரு அறைவிடமாட்டாரா. முதலில் அதைப் புரிஞ்சுக்கணும். எந்தத்துறையில் தப்பு நடந்தால், ஒருத்தன் படுக்கைக்கு கூப்பிட்டால் பளார்னு அறைஞ்சிட்டுப் போயிடணும். தேன் எடுக்கிறவன் புறங்கையை வைச்சு நக்கத்தான் செய்வான். இப்போது யார் தேன் கூட்டில் கல் எறியார்னு பார்க்கணும். சினிமாவை ஊத்தி மூடுறதுக்காகப் பார்க்கிறார்கள்.

கேரளாவில் அம்மா சங்கம் மறுபடியும் அமைக்கப்படணும்: மன்சூர் அலிகான்

கேரளாவில் மோகன் லால் ஒரு மீட்டிங்கில், ஒரு ஜாலி மூடில் ஏதோ பண்றார் என்றால், அது ஒரு சாதாரண விஷயம். அதை வைச்சு, அவரோட கேரக்டரை தவறாகப் பேசக்கூடாது. பொதுவாகவே, நடிகர்கள் சங்கம் என்றாலே, நடிகர்களின் பாதுகாப்புக்காக இருப்பது தான். ஏழைநடிகர்கள் பலர் தமிழ்நாட்டில் இறந்திட்டாங்க. அவர்களுக்கெல்லாம் என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கொரோனா என்று சொல்லி ஊத்தி மூடிட்டாங்க. எங்கேயும் போகமுடியவில்லை. அந்த மாதிரி இங்கேயும் சரி நடிகர் சங்கம் தான் பலமாக இருக்கணும். கேரளாவில் அம்மா சங்கம் மறுபடியும் அமைக்கப்படணும். அதை மோகன் லாலும், மம்மூட்டியும் சேர்ந்து மீண்டும் அமைக்கணும்.

நடிகர்களுக்கு ஒரு சங்கம் இருக்கும் வரை, மற்ற நடிகர்கள் சந்தோஷமாக இருக்க முடியும். நாங்க மத்தவங்களை சந்தோஷப்படுத்துறவங்க. சினிமாவை கேவலப்படுத்த, சினிமாவை அவமானப்படுத்த, சிலரை டார்க்கெட் பண்ணி, ஒரு சில கட்சியில் சேரச்சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம். இல்லையா, அது நடந்திருக்கலாம். எம்.பி.ஆகுங்கள் என்று கட்டாயப்படுத்தியிருக்கலாம். அவர்கள் மறுத்திருக்கலாம். நீ எப்படி தலைநிமிர்ந்து வாழுற அப்படின்னு, யாரையும் விட்டு புகார் கொடுக்க வைச்சிருக்கலாம். சினிமாவை விட்டுக்கொடுக்கக் கூடாது. சினிமா தான் மக்களுக்கு மகிழ்ச்சியைத்தருது. அதை இழுத்து மூடி எல்லோரையும் கேவலப்படுத்தணும் அப்படிங்கிறதுக்காக செய்யப்பட்டிருக்கலாம். உண்மை இதுதான்.

உன்னாவ் வழக்கில் கேள்விகேட்டீர்களா?: மன்சூர் அலிகான்

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றார்களே அதை விசாரிக்க கமிட்டி அமைச்சாங்களா?பில்கீஸ் பானு வழக்கு என்ன ஆச்சு. ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கமிட்டி அமைச்சிட்டாங்களா? உங்களைக் கேட்கிறேன். கமிட்டி அமைச்சு, தண்டனை கொடுத்தாங்களா? தூக்குத்தண்டனையில் போட்டார்களா? பில்கீஸ் பானு வழக்கில் குற்றவாளியாக இருந்தவர், இப்போது நாட்டை ஆட்சிசெய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக கேள்விகேட்டீர்களா?

இது பொதுவான பிரச்னையில்லையா. ஒருத்தன் பாலியல் வன்கொடுமைசெய்துவிட்டு நாட்டை ஆட்சிசெய்துகொண்டு இருக்கான். அதற்கு கமிட்டி இல்லை. நடிகர்கள் என்றால் உங்களுக்கு இளிச்சவாயனா? அரசியல்வாதிகள் ஆட்சிசெய்துகொண்டு இருப்பவர்கள் இவ்வளவு வன்மத்தை செய்துவிட்டு, நடிகர்களைப் புகழ் அடையவிடாமல் செய்திட்டு இருக்காங்க.

நான் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்டேன். 15 நாள்கள் ஜெயிலில் இருந்தேன். கடைசியில் நவம்பர் 11, 2011-ல் விடுதலையானேன். எனக்கு அந்தப்பெண் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கணும்னு தீர்ப்பு ஆகிடுச்சு. இதில் யாருக்குப் புகழ் கிடைச்சது. அந்தபெண்ணுக்கு முன்னாடியே கல்யாணம் ஆனது வெளியில் தெரிஞ்சது. அந்தப்பெண் கன்னி கழிஞ்சது வெளியில் தெரிஞ்சது. நடிகர் சங்கம் என்னைக் காப்பாற்றவரவில்லை. நில ஆக்கிரமிப்பில் நான் ஜெயிலுக்குப் போனேன். எப்போது எல்லாம் நான் அரசியலில் கால் பதிக்க விரும்புறேனோ,அப்போது எல்லாம் நான் நாசப்படுத்தப்பட்டேன். சிலநாட்களில், நான் நிரபராதின்னு தீர்ப்பு வந்துச்சு. அப்படி பழிவாங்கத்தான் இந்த சட்டங்களைப் பயன்படுத்துவாங்க. நாங்க யாரும் உத்தமர்கள்னு சொல்லல. நானும் சராசரி மனிதன் தான்’’ என நடிகர் மன்சூர் அலிகான் விரிவான பேட்டியளித்தார்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.