மண்டை மேல இருந்த கொண்டைய மறந்துடீங்களே.. ரூ. 150 கோடி நஷ்ட ஈடு? ரிலீசுக்கு முன்னரே சர்ச்சையில் சிக்கிய விடாமுயற்சி
ரிலீசுக்கு முன்னரே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய விடாமுயற்சி படக்குழு, ரூ. 150 கோடி நஷ்ட ஈடு கோட்டு நேட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

அஜித்குமார் நடிப்பில் நீண்ட நாள்களாக உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் டீஸர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாள்கள் மட்டும் ஷுட்டிங் எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடைய தற்போது விடாமுயற்சி படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. காப்புரிமை சட்டத்தை மீறியதாக படக்குழுவினர் மீது ரூ. 150 கோடி நஷ்டஈடு கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஹாலிவுட் படத்தின் ஹாப்பி
அஜித்குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக இருந்து வரும் விடாமுயற்சி படம், 1997இல் வெளியான ஹாலிவுட் படமான ப்ரேக்டவுன் படத்தின் ரீமேக்காக உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி பட டீஸரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளும், ப்ரேக்டவுன் படத்தில் இடம்பெறும் காட்சிகளுக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பதாக சமூக வலைத்தளங்கள் பலரும் ஸ்கீரின்ஷாட்களையும், விடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.