Ajith: தல அஜித் அரசியலில் தலை காட்டுவாரா.. இன்றும் நிறைவேறாத அஜித் ஆசை.. ரோல் மாடல் இரண்டே பேர்தா.. செல்பியின் பின்னணி!
Ajith : அஜித் ஒரு போதும் அரசியலுக்கு வரமாட்டார். ஒரு ஜனநாய குடிமகனாக தவறாமல் எங்கிருந்தாலும் வந்து ஓட்டு போடுவாரே தவிர அரசியலுக்கு வரும் எண்ணம் அவருக்கு இல்லவே இல்லை. அதனால் நீங்கள் ஆசைப்படவே வேண்டாம்.

Ajith : நடிகர் அஜித் சமீபத்தில் விரும்பி எடுத்த செல்பிக்கான முக்கிய காரணம் மற்றும் அஜித் அரசியலுக்கு வருவாரா என்பது போன்ற அஜித் ரசிகர்களின் கேள்விகளுக்கு மூத்த பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் தனது V K Sundar Updates என்ற யூடியூப் சேனலில் விளக்கம் அளித்துள்ளார். அதுகுறித்து இங்கு பார்கலாம். கேள்வி: அஜித் எடுத்து கொண்ட ஒரு செல்பி போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து ஊரெல்லாம் தல அஜித்துடன் நின்று போட்டோ எடுக்கணும் செல்பி எடுக்கணும் என்று ரசிகர்கள் பலரும் ஆசைப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அஜித் அவர்களே விரும்பி ஒருவருடன் செல்பி எடுத்துக்கொள்கிறார் என்றால் அவர் யார் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பதில் : அந்த செல்பியில் இருப்பவர் கார் ரேசர். பிரேசில் நாட்டைச் சேர்த்த அயர்டன் சேனா. 1988 ,90,91 ஆகிய காலகட்டங்களில் பார்முலா ரேசில் உலக அளவில் நடைபெற்ற பந்தயத்தில் சாம்பியன் ஷிப் பட்டம் பெற்றார். அந்த காலகட்டத்தில் அஜித் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். தன் வாழ்நாளில் பைக் ரேசராக ஒரு கட்டத்திற்கு வந்த பிறகு கார் ரேசராக மாறி பார்முலா 1ல் பங்கேற்று சாம்பியன் ஷிப் வாங்க வேண்டும் என்பதுதான் அஜித்தின் 35 ஆண்டு கால கனவு. அமராவதி படம் எல்லாம் கடந்து வளர்ந்து கொண்டிருந்த காலங்களில் லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான புத்தகங்களை வாங்கி படிப்பார். அப்போதே இந்த ரேசரோட போட்டோஸ் எல்லாம் அஜித்தின் டேபிளில் இருந்து நான் பார்த்திருக்கிறேன்.
அதேபோல் அஜித்தின் ஆபிஸ் டேபிளில் ரேஸ் பைக், மற்றும் ரேஸ் காரின் மினியேச்சர் இருக்கும். ஆரம்ப கால கட்டத்தில் இருந்து ஆரம்பித்து இன்றுவரை அவருடைய டேபிளில் அது இருக்கும். 90களில் இருந்து அவருக்கு கார் ரேஸ் மேல் ஆர்வம் இருந்தாலும் அவர் மிகவும் லேட்டாகதான் கார் ரேஸ்க்கு போனார். அதற்கு காரணம் உலகத்திலேயே ரொம்ப காஸ்ட்லியான விளையாட்டுனா அது கார் ரேஸ்தான். அதனால் ஆரம்ப கால கட்டத்தில் அவரால் கார் ரேஸ்க்கு போக முடியவில்லை. அது அவருக்கு ரொம்ப வருத்தம். அதுக்கு பின் சினிமாவில் சம்பாதிக்க ஆரம்பித்த பின் பார்முலா 2 வரை போனார். ஆனால் பார்முலா 1 போக முடியவில்லை. கார் ரேஸ்ல ஆர்வம் காட்டினால் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியதே அதற்கு காரணம்.