Ajith Kumar: ரூ. 3.5 கோடியில் போர்ஸ் புதிய சொகுசு கார்..ஷாலினி பகிர்ந்த புகைப்படத்தில் ஸ்டைல் லுக்கில் அஜித்-ajith kumar poses with his new porsche worth rs 3 5 cr shalini has this to say - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: ரூ. 3.5 கோடியில் போர்ஸ் புதிய சொகுசு கார்..ஷாலினி பகிர்ந்த புகைப்படத்தில் ஸ்டைல் லுக்கில் அஜித்

Ajith Kumar: ரூ. 3.5 கோடியில் போர்ஸ் புதிய சொகுசு கார்..ஷாலினி பகிர்ந்த புகைப்படத்தில் ஸ்டைல் லுக்கில் அஜித்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 13, 2024 06:05 PM IST

Ajith Kumar: அஜித்குமார் ரூ. 3.5 கோடியில் போர்ஸ் புதிய சொகுசு கார் வாங்கியுள்ளார். கார் அருகே அஜித் இருக்கும் புகைப்படத்தை அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Ajith Kumar: ரூ. 3.5 கோடியில் போர்ஸ் புதிய சொகுசு கார்..ஷாலினி பகிர்ந்த புகைப்படத்தில் ஸ்டைல் லுக்கில் அஜித்
Ajith Kumar: ரூ. 3.5 கோடியில் போர்ஸ் புதிய சொகுசு கார்..ஷாலினி பகிர்ந்த புகைப்படத்தில் ஸ்டைல் லுக்கில் அஜித்

சினிமா ஒரு புறம் என்றாலும் அஜித் செய்யும் எந்தெவாரு விஷயத்தை அவரது ரசிகர்கள், நலம் விரும்பிகள் பெரிய செய்தியாக்கி டிரெண்டாக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில்,. ரூ. 3.5 கோடி மதிப்பில் போர்ஸ் பிராண்ட் புதிய சொகுசு கார் ஒன்றை அஜித் வாங்கியிருப்பது லேட்டஸ்ட் செய்தியாக வைரலாகி வருகிறது. நடிப்பதை காட்டிலும் ரேஸிங்கில் ஆர்வம் கொண்டவராக அஜித்குமார் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அஜித்திடம் பல்வேறு மாடல்களில் கார், பைக்குகளின் கலெக்சன் குவிந்து இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது போர்ஸ் 911 GT3 RS மாடல் காரை அஜித் வாங்கியுள்ளார்.

ஷாலினி பகிர்ந்த புகைப்படம்

தனது புதிய காரின் பக்கத்தில் அஜித் நிற்க, அந்த புகைப்படத்தை அவரது மனைவியும், நடிகையுமான ஷாலின் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"எனது ஸ்டைல் மற்றும் இதயம் அவரது புதிய காருடன்" என கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.

அஜித்தின் போர்ஸ் கார் சிறப்பு அமசம் என்ன?

போர்ஷேயின் இணையதளத்தின்படி, இந்த மாடலின் விலை ரூ.3,50,56,000. இது 386 kW/535 PS பவர் மற்றும் 296 km/h அதிகபட்ச வேகம் கொண்டது. அஜித் சமீபத்தில் துபாயில் ரூ.9 கோடி மதிப்பிலான ஃபெராரி எஃப்8 ட்ரிப்யூட்டோ காரையும் வாங்கினார்.

துபாயில் உள்ள ஒரு போர்ஸ் ஷோரூமில் இருந்து அஜித்தின் புகைப்படங்கள் ரசிகர்களால் எடுக்கப்பட்டு எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது. இதன் பின்னர் ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் ரியாக்சன்

அஜித் தனது புதிய காருடன் போஸ் கொடுத்திருப்பதை கண்ட ரசிகர்கள்  பல்வேறு விதமான மகிழ்ச்சி கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். "மேன் இன் 50களின் உணர்ச்சிமிக்க சேகரிப்பு" என்று ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 

மற்றொரு ரசிகர் தனது எக்ஸ் பக்கத்தில் அஜித் படங்களைப் பகிர்ந்துகொண்டு, “Wooow! முதலில் ரெட் ஃபெராரி, ஏகே (அஜித் குமார்) இந்த பிரமிக்க வைக்கும் போர்ஷே 911 ஜிடி3யை தனது கார் சேகரிப்பில் சேர்த்துள்ளார். கார்கள் மீதான அவரது மோகம் முடிவற்றது.

மற்றொரு ரசிகர், "மனிதனும் இயந்திரமும்" என பதிவிட்டுள்ளார். "GT3RS இறுதியாக AKஐ பெறுகிறது" என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சில ரசிகர்கள் 3.2 வினாடிகளில் 0-100 கிமீ/மணி வேகத்தில் காரின் விவரக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.

விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட்

முன்னதாக, அஜித்தின் விடாமுயற்சி படத்தை தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருவதால் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியிடாக படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ஏற்கனவே அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதிக்கு தள்ளி போகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.