என்னை இழு இழு இழுக்குதடி.. வழு வழு வழுக்குதடி.. விவாகரத்து அறிவிப்புக்குப் பின்.. ஃபிரெஷ்ஷாக ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரவி
என்னை இழு இழு இழுக்குதடி.. வழு வழு வழுக்குதடி.. விவாகரத்து அறிவிப்புக்குப் பின்.. ஃபிரெஷ்ஷாக ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜெயம் ரவி கூட்டணியில் வந்த காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல் வைரல் ஆகி வருகிறது.

ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், நடிகர் ஜெயம் ரவி. தமிழில் ஜெயம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஹிட் நடிகர் ஆனவர். அதன்பின், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தாஸ்,மழை, இதயத்திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தில்லாலங்கடி, ஆதி பகவன், நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், சகலா கலா வல்லவன், தனி ஒருவன், பூலோகம், மிருதன், போகன், வனமகன், கோமாளி, பூமி, பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 வரை பல்வேறு ஹிட் படங்களில் நடித்தவர். இவரது பல படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் ரகத்தினைச் சார்ந்தவை. ஜெயம் ரவி படப் பாடல்கள் என்று, ஒரு போல்டர் போட்டு கணினியில் சேவ் செய்யும் அளவுக்கு ஒவ்வொன்றும் அலாதியானது. இந்நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த இறைவன், சைரன், பிரதர் ஆகியப் படங்கள் சரியான வரவேற்பினைப் பெறவில்லை.
ஜீனி படத்தில் புதிய அவதாரத்தில் ஜெயம் ரவி:
இந்நிலையில் கோமாளி படத்தைத் தயாரித்த வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், தயாரிப்பு நிறுவனம், நடிகர் ஜெயம் ரவியை வைத்து மீண்டும் ஜீனி என்னும் படத்தைத் தயாரித்து வருகிறது. அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி மற்றும் தேவயானி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.