‘அத பத்தி என்கிட்ட கேட்ககூடாது.. தேசிய விருதுக்கு தகுதியானதுதான்” - ஜானி மாஸ்டர் கேள்விக்கு நழுவிய நித்யா மேனன்
திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்ற ‘மேகம் கருக்காதே’ பாடலுக்கு நடன வடிவமைத்தவரும், தற்போது பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருமான ஜானி குறித்து நித்யா மேனன் பேசி இருக்கிறார்.

அத பத்தி என்கிட்ட கேட்ககூடாது.. தேசிய விருதுக்கு தகுதியானதுதான்” - ஜானி மாஸ்டர் கேள்விக்கு நழுவிய நித்யா மேனன்
‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறித்து நித்யாமேனன் பேசி இருக்கிறார்
இது குறித்து அவர் பேசும் போது, “ ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பதை நான் ஒரு நல்ல ட்ரெண்டாக பார்க்கிறேன். இந்த மாதிரியான படங்களுக்கு பெரிய தயாரிப்பு செலவு இல்லை, பெரிய செட்கள் அமைக்கப்படுவதில்லை, விதவிதமான காஸ்ட்யூம்கள் இல்லை. இது முழுக்க முழுக்க நடிப்புக்காக கொடுக்கப்பட்ட விருது. ‘திருச்சிற்றம்பலம்’ அந்த மாதிரியான ஒரு படம் தான். உண்மையில் நடிப்புதான் அந்த படத்தினுடைய ஹைலைட்டான விஷயம்.