Anushka: மீண்டும் கோதாவில் இறங்கும் நடிகை! ஆட்டம் இனி சூடு பிடிக்கும்... ஆக்ஷனுக்கு தயாராக சொன்ன படக்குழு-after long time actress anushka commited new movie in telugu - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anushka: மீண்டும் கோதாவில் இறங்கும் நடிகை! ஆட்டம் இனி சூடு பிடிக்கும்... ஆக்ஷனுக்கு தயாராக சொன்ன படக்குழு

Anushka: மீண்டும் கோதாவில் இறங்கும் நடிகை! ஆட்டம் இனி சூடு பிடிக்கும்... ஆக்ஷனுக்கு தயாராக சொன்ன படக்குழு

Malavica Natarajan HT Tamil
Sep 21, 2024 03:43 PM IST

Anushka: உடல் எடை பிரச்சனை காரணமாக புதிய படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்து வந்த நடிகை அனுஷ்கா தற்போது ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

Anushka: மீண்டும் கோதாவில் இறங்கும் நடிகை! ஆட்டம் இனி சூடு பிடிக்கும்... ஆக்ஷனுக்கு தயாராக சொன்ன படக்குழு
Anushka: மீண்டும் கோதாவில் இறங்கும் நடிகை! ஆட்டம் இனி சூடு பிடிக்கும்... ஆக்ஷனுக்கு தயாராக சொன்ன படக்குழு

சினிமாவில் தொய்வு

அவர் தொடர்ந்து ஹிட் படங்களைத் தருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அவர் உடல் எடை காரணமாக அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், அவர் தற்போது தெலுங்கில் முன்னணி இயக்குநரான கிரிஷின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

சிங்கம், பாகுபலி என தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த அனுஷ்கா தீவிர உடற் பயிற்சியில் ஈடுபடுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். காரணம் தொடர்ந்து அதிகரித்த உடல் எடை மற்றும் திருமண பேச்சுகள்.

முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரங்கள்

இவர் தெலுங்கில் வெளியான அருந்ததி படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கியிருந்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். 90'ஸ் கிட்கள் பயந்து அலரிய பேய் பட லிஸ்ட்டில் அருந்ததி படத்திற்கு முக்கிய பங்கு உண்டு. பொம்மாயி என்ற வார்த்தையை கேட்டாலே அலறியவர்களும் உண்டு. பின் இந்த வெற்றியால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

கெரியரை சறுக்க வைத்த படம்

இதன்பின், நடிகர் ஆர்யாவுடன் ஃபிட்னஸ் விழிப்புணர்வு படமான இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அனுஷ்கா. டயட், சைக்கிளிங் போன்ற சின்ன சின்ன செய்கைகளின் மூலமே உடல் எடையை குறைக்க முடியும். ஆனால், பலர் ஜிம், வெயிட் லாஸ் சென்டர் என ஆரம்பித்து மக்களை ஏமாற்றுகின்றி வருகின்றனர் என்பதை விளக்கவே இந்தப் படம் எடுக்கப்பட்டது.

ஆனால், உடல் எடையை வேகமாக ஏற்றிய அனுஷ்காவால் எடையை குறைக்க முடியவில்லை, இதற்காக படத்தில் கூறியவற்றையே செய்து பார்த்தும் வேலைக்கு ஆகாததால் மனமுடைந்தார். பின் எவ்வளவு முயன்றும் உடல் எடையை குறைக்க முடியாமல் திணறினார். ஏன் பாகுபலி 2ம் பாகத்தில் அனுஷ்காவை சிஜி மூலமே உடல் எடை குறைந்தவராக காட்டினர்.

இதற்கிடையில், அனுஷ்காவின் திருமணம் குறித்து பல தகவல்கள் பரவியதால் அவர் அதிக அளவில் சினிமாவில் கவனம் செலுத்தவில்லை. கடந்த 7 வருடங்களில் அவர் 3 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்

இந்த சமயத்தில் தான் முன்னணி தெலுங்கு இயக்குநர் கிரிஷ் உடன் அனுஷ்கா இணைந்து பணியாற்ற தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். ஆந்திர, ஒடிசா எல்லையில் கஞ்சா கடத்தப்படுவது தொடர்பாக இந்தக் கதை அமைந்துள்ளதாம். இந்தப் படத்திற்கு காட்டி என பெயரிட்டுள்ளது படக்குழு. படத்தின் அறிவிப்பு வெளியாகும் முன்பே சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு பின் நிறுத்தப்பட்டதாகவும், தற்போது ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருபதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக அனுஷ்கா 14 ஆண்டுக்கு முன் இயக்குநர் கிரிஷ் உடன் இணைந்து வேதம் என்ற படத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.