Sathyaraj Vs Rajini:எதிரும் புதிரும் இணைந்து உருவாகும் கூலி.. நீண்ட ஆண்டுகளுக்குப்பின் ரஜினி படத்தில் நடிக்கும் சத்யராஜ்
Sathyaraj Vs Rajini: நீண்ட ஆண்டுகளுக்குப் பின் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Sathyaraj Vs Rajini: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 171ஆவது படமான ‘கூலி’திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைத்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கயிருக்கிறார். இப்படம் ரஜினிகாந்தின் திரை வரிசையில் 171ஆவது படமாக வருகிறது. இப்படத்தில் சண்டைக் காட்சிகளை அன்பறிவ் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
கூலி திரைப்படத்தில் ரஜினியை வேறுவிதமாக காட்டிய லோகேஷ் கனகராஜ்:
படக்குழு, ரஜினிகாந்தின் 171ஆவது படம் குறித்த போஸ்டரை மார்ச் 28ஆம் தேதி வெளியிட்டது. அதில் ரஜினிகாந்தின் 171ஆவது படத்தின் டைட்டிலை, ஏப்ரல் 22ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்து இருந்தது. அப்போது வெளியிடப்பட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கோல்டு கைக்கடிகாரங்களை, விலங்குபோல் மாட்டி, கூலிங் கிளாஸ் அணிந்து சிரித்த முகத்துடன் இருக்கிறார். அந்த ஸ்டில் ரசிகர்கள் பலரை ஈர்த்தது.