Lokesh Kangaraj: சின்மயிக்கு ஆதரவு அளித்த லோகேஷ் கனராஜுக்கு கண்டனம்! லியோ படத்தால் தொடரும் சர்ச்சை
சின்மயி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள டப்பிங் யுனியன் துணை தலைவர் ராஜேந்திரன், உறுப்பினராக இல்லாத சின்மயி குரலை லியோ படத்தில் த்ரிஷாவின் குரலுக்காக பயன்படுத்தியதற்காக இயக்குநர் கனகராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் வெளியாகி பாக்ஸ் ஆபில் வசூலில் பட்டையை கிளப்பிய படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தளபதி விஜய், த்ரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும், வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 600 கோடி வரை வசூலித்தது. படத்தின் நாயகியான த்ரிஷாவுக்கு, பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி டப்பிங் பேசியிருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு தென்னிந்திய டப்பிங் யுனியன் கண்டனம் தெரிவித்துள்ளது. டப்பிங் யுனியனால் தடை செய்யப்பட்ட சின்மயி குரலை பயன்படுத்தியதோடு, அவருக்கு சம்பளமாக ரூ. 50 ஆயிரம் வரை வழங்ரகியிருப்பது சட்டவிரோத செயல் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், டப்பிங் யுனியனில் உறுப்பினர் அல்லாத ஒருவரை பயன்படுத்தினால் குறிப்பிட்ட தொகை யுனியனுக்கு வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, டப்பிங் யுனியனில் உறுப்பினராக இருந்து வந்த சின்மயிடம் சந்தா கட்டணத்தை செலுத்தி உறுப்பினர் சேர்க்கையை புதுப்பிக்குமாறு கேட்டபோது, தான் வாழ்நாள் உறுப்பினராக இருப்பதால் பணம் செலுத்த மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் யுனியனில் இருந்து நீ்க்கப்பட்டு, டப்பிங் குரல் கொடுக்கவும் தடை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடினார் சின்மயி. இதில் சின்மயிக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்த நீதிமன்றம், அவரது தடைக்கும் இடைக்கால தடை விதித்தது.,
இதைதத்தொடர்ந்து லியோ படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட பதிப்புகள் த்ரிஷாவுக்கு குரல் கொடுத்தார் சின்மயி. இந்த விவகாரம் தொடர்பாக அப்போதே டப்பிங் யுனியன் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து, சின்மயி விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கும் டப்பிங் யுனியன் துணை தலைவர் ராஜேந்திரன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
லியோ படம் வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில் அந்த படம் தொடர்பாக எழுந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்