நிறைமாத கர்ப்பிணி ஆன தனுஷ் பட நடிகை..கர்ப்ப கால வயிற்றுடன் க்யூட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பகிர்வு
தனுஷ், சூர்யா படங்களில் நடித்திருக்கும் வித்யா பிரதீப், மருத்துவராகவும் உள்ளார். நிறைமாத கர்ப்பிணி ஆகியிருக்கும் அவர் கர்ப்ப வயிறுடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த நடிகையும், மாடலுமான வித்யா பிரதீப் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மவலையாளம், கன்னட சினிமாக்களிலும் நடித்திருக்கும் இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். கர்ப்ப வயிற்றுடன் போட்டோஷூட் எடுத்துக்கொண்டிருக்கும் வித்யா பிரதீப் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
எங்கள் காதல் கதை என்றென்றும் நிலைத்து நிற்கும்
இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாவில் கர்ப்ப வயிற்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் வித்யா பிரதீப் பகிர்ந்திருக்கும் பதிவில், "நான் உணக்காக காத்திருக்கிறேன். என் விலைமதிப்பற்ற ஒன்று, என் இதயம், என் ஆன்மா, என் உதய சூரியன். அருளால் மூடப்பட்டிருக்கும், மிகவும் தூய்மையான மற்றும் சிறிய, அன்பான பரிசு, எல்லாவற்றிலும் பெரியது.
என் வாழ்க்கை முழு வட்டமாகியுள்ளது. தூய்மை தூய பேரின்பம், முழுமை மற்றும் உண்மையான பேரின்பம். பருவங்கள் மாறும்போதும், காலம் வெளிவரும்போதும் எங்கள் காதல் கதை என்றென்றும் நிலைத்து நிற்கும்" என்று எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.
