Actress Anjali: தனக்கும் ஜெய்க்கும் இடையே உள்ள பந்தம் இதுதான் - நடிகை அஞ்சலி ஓபன் டாக்-actress anjali openly says that this is the bond between her and jai - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Anjali: தனக்கும் ஜெய்க்கும் இடையே உள்ள பந்தம் இதுதான் - நடிகை அஞ்சலி ஓபன் டாக்

Actress Anjali: தனக்கும் ஜெய்க்கும் இடையே உள்ள பந்தம் இதுதான் - நடிகை அஞ்சலி ஓபன் டாக்

Marimuthu M HT Tamil
Sep 20, 2024 09:14 AM IST

Actress Anjali: தனக்கும் ஜெய்க்கும் இடையே உள்ள பந்தம் இதுதான் என நடிகை அஞ்சலி ஓபன் டாக்காக கூறியுள்ளார்.

Actress Anjali: தனக்கும் ஜெய்க்கும் இடையே உள்ள பந்தம் இதுதான் - நடிகை அஞ்சலி ஓபன் டாக்
Actress Anjali: தனக்கும் ஜெய்க்கும் இடையே உள்ள பந்தம் இதுதான் - நடிகை அஞ்சலி ஓபன் டாக்

இதுதொடர்பாக பிஹைண்ட்வுட்ஸ்-க்கு ஒரு வருடத்துக்கு முன்பு அளித்த பேட்டியில் நடிகை அஞ்சலி கூறிய பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

’அஞ்சலிக்கு அப் அண்ட் டவுன்ஸ் எப்படி இருந்துச்சு. அப்படி எதுவும் நடந்திருக்கா?

பதில்: எனக்கு என்னுடைய தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இல்லை. ஆனால், என்னுடைய வாழ்க்கையில் கடினமான கால கட்டம் இருந்தது. அதனுடைய பாதிப்பு இருக்கும். நாம் மனதளவில் என்ன ஃபீல் பண்றமோ, அதுதான் தெரியும் என்பது என்னோட ஃபீலிங். நீங்கள் ஹேப்பியாக இருந்தால் ஹேப்பியா தெரிவீங்க. சோகமாக இருந்தால் சோகமாக தெரிவீங்க. எனக்கும் கடினமான காலங்கள் இருந்திருக்கு. யாருமே நான் ஈஸியா வந்திட்டேன் அப்படின்னு சொன்னால், அது பொய். எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும்.

அஞ்சலிக்கு திரைப்படங்களும் சரியாக இல்லை. பலரும் அஞ்சலி அடுத்தகட்டத்திற்குப் போயிருப்பதாகச் சொன்னாங்க. அதை நீங்க நம்புறீங்களா?

பதில்: இல்லை. அது என்னோட பெர்ஷனல் பிரச்னை. நான் மனதளவில் ஸ்ட்ராங்காக இருந்தால் தான், படத்தில் நூறுவிழுக்காடு கொடுக்கமுடியும். ஆனால், நான் திரும்ப வந்திருக்கேன்னு நினைக்கிறேன்.

சிங்கம் படத்தில் அஞ்சலி ஒரு பாடலுக்கு நடனமாடியது அதிர்ச்சியாக இருந்தது. ஏன்?

பதில்: அது ஒரு சூழ்நிலை. என் கையில் அது இல்லை. சிங்கம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுனது அப்படிதான்.

அஞ்சலியை எப்போதுமே ஜெய் கூடவே சேர்த்துவைத்து பேசிட்டே இருக்காங்க. அது உங்களை எப்படி பாதிக்குது?

பதில்: நான் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன் என டிக்ளேர் பண்ணவே இல்லையே. எனக்கு சினிமாவில் நிறைய ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்க யாரை வைச்சு எழுதணும்ங்கிறது அவர்கள் முடிவு எடுத்துக்கொள்வார்கள். அது என் கையில் இல்லை. அதனால், அதைப்பற்றி நான் எப்போதுமே பேசுவது இல்லை.

இப்படி சில சூழ்நிலைகளுக்கும் நிபந்தைகளுக்கும் ஆளாகியிருக்கீங்களா?

பதில்: சிலது அப்படி நடக்கும். அது நம் கையில் இருக்காது. சில கோரிக்கைகளுக்காக, கட்டாயத்துக்காக பண்ணவேண்டியிருக்கும். ஒரு நடிகையாக, எனக்குக் கொடுக்கப்பட்டதை எப்படி மோசமாக நடிக்கக்கூடாது என்பதை மட்டும் தான், நான் பார்த்துக்கொள்ளமுடியும்.

பாவக்கதைகள் பண்ணும்போது, அஞ்சலி கவர்ச்சியாக நடிச்சது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது? ஒருவேளை படவாய்ப்புகள் குறைந்துவிட்டதோ அப்படி ஒரு பேச்சு வந்தது?

பதில்: எனக்கு விக்னேஷ் சிவன் கதை சொன்னவுடன், அதைப் பற்றி யோசிக்க கொஞ்சம் டைம் கொடுங்கன்னு கேட்டேன். தயக்கமாகத்தான் இருந்தது. ஏனென்றால், முன்பு நான் அந்த மாதிரி கதாபாத்திரங்கள் செய்தது இல்லை. அவ்வளவு போல்டாக இருந்துச்சு. எனக்கும் ஒரே மாதிரி ரோல் செய்தால் போரிங்காக இருக்கும். கதை சொல்லும்போதே, விக்னேஷ் சிவன் முக்கியமான காட்சிகளை எல்லாம் விளக்கிவிட்டார். செய்து முடிச்சதுக்குப்பின், பலரும் நீங்கள் இப்படி எல்லாம் நடிப்பீங்களான்னு கேட்டார்.

நடிகைகள் உடையை வைத்து இவர்கள் இப்படி தான் அப்படின்னு சிலர் பேசுவது பற்றி?

பதில்: நடிகை என்பது ஒரு பப்ளிக் ஃபிகர். அதனால் அவர்களோட பெர்ஷனல் லைஃப்பை தீர்மானிக்கமுடியாது. எல்லோருக்குமே ஒரு பெர்ஷனல் வாழ்க்கை இருக்குது. நீங்கள் இப்போது கேட்பீங்க. போயிடுவீங்க. நான் தான் அதுக்குள்ள இருந்து பார்த்து, டீல் பண்ணி வெளியில் வரணும். அது யாருக்குமே ஈஸி கிடையாது. ஆரம்பத்தில் சினிமாவுக்கு வந்த புதிதில் ரொம்ப டஃப் ஆக இருக்கும். அதைத் தேடி படிச்சு வேற, ஃபீல் பண்ணுவேன்.

உங்களைப் பற்றி வந்த மோசமான கிசுகிசு என்ன?

பதில்: நான் கல்யாணம் ஆகி, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டேன் என வரும் கிசுகிசு தான். அது மோசம் கிடையாது. ஆனால், அதில் ஒரு வேடிக்கை இருக்கு. ஏனென்றால், எனக்கே தெரியாது எனக்கு கல்யாணம் ஆனது(சிரிக்கிறார்). எனக்கு இதுவரை கல்யாணம் ஆகலை. அப்படியானால், கண்டிப்பாகச் சொல்வேன். என் அம்மாவே கேட்டாங்க,கல்யாணம் ஆகிட்டதா சொல்றாங்க, உனக்குத் தெரியாதான்னு கேட்டாங்க(சிரிக்கிறார்).’’ என முடிக்கிறார், நடிகை அஞ்சலி

நன்றி: பிஹைண்ட்வுட்ஸ்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.