Vichitra: நடிகைகள் அவுட்டோர் சூட் போகும்போது.. ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறவன்.. ரகசியத்தை கசிய விட்ட விசித்ரா
Vichitra: நடிகைகள் அவுட்டோர் சூட் போகும்போது.. ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறவன்.. ரகசியத்தை கசிய விட்ட விசித்ராவின் பேட்டியைக் காணலாம்.
Vichitra: நடிகைகள் அவுட்டோர் சூட் போகும்போது நடப்பது பற்றியும், ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறவன் படம் எடுக்கும் ரகசியத்தையும் நடிகை விசித்ரா வெளியில் கூறியுள்ளார்.
பிரபல மலையாள நடிகை ஒருவர், கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் எழுந்தது. பின்னர் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க கேரள நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழுவினை அமைத்தது, மாநில அரசு.
கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று, நீதிபதி கே.ஹேமாவின் அறிக்கையினை கேரள அரசு வெளியிட்டது. அந்த அறிக்கை பெண் நடிகர்கள் பாலியல் துன்புறுத்தல் என்ற "மோசமான தீமையை" எதிர்கொள்கின்றனர் என்று கூறியது. மேலும் பல முன்னணி நடிகர்கள் பணியிடத்தில், நடிகைகளையும் திரையுலகப் பெண்களையும் கபளீகரம் செய்ததை உறுதிப்படுத்தியது.
பாலியல் தொல்லை கொடுத்த முன்னணி நடிகர்கள்
இந்த அறிக்கை வெளியானதற்குப் பின், பலதரப்பட்ட நடிகைகளும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லையை வெளியில் பேசிவருகின்றனர். கேரளாவின் முன்னணி நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ், மலையாள நடிகர் சித்திக், மலையாள இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்தன.
இதை விசாரிக்க வேண்டிய கேரளாவின் நடிகர் சங்கமான அம்மா சங்கத்தின் தலைவர் மோகன் லால் ராஜினாமா செய்தார். மேலும் பல நிர்வாகிகளும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், அம்மா சங்கம் முற்றிலுமாக கலைந்தது.
இந்நிலையில் நடிகர் முகேஷ் முன்ஜாமீன் பெற்று வைத்துள்ளார். அதேபோல் நடிகை சர்மிளா, மோகனன் என்னும் புரொடியூசர் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் கூறினார். அதேபோல் நடிகை ஸ்ரீலேகா மித்ராவும் ரஞ்சித் பாலகிருஷ்ணன் என்பவர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறினார்.
ஹேமா கமிட்டி தொடர்பாக நடிகை விசித்ரா கலாட்டா பிங் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘’மிகவும் வருத்தமாக உள்ளது. பெரிய பெரிய புள்ளிகள் இந்தப் பாலியல் தொல்லை பிரச்னைகளை செய்ததால் நிறைய வெளிவராமல் தடுத்து இருப்பாங்க. தடங்கல் இருந்திருக்கும். இப்போது வந்திருச்சு.
பிக்பாஸ் மாதிரியான நிகழ்ச்சிகளில் எனக்கு நடந்த பாலியல் தொல்லையை நான் சொன்ன மாதிரி எல்லோரும் வெளியில் சொல்லமாட்டாங்க. ஏனென்றால், அதன்பின்வரும் விளைவுகளை யோசிச்சு நிறையப்பேர் சொல்லமாட்டாங்க. சிலர் தவறாகப் பேசியிருவாங்களோன்னு ஒரு பயம் இருக்கு.
இரவில் 10 மணிக்கு மேல் மீட்டிங் இருக்கு அப்படின்னு சிலர் சொல்லும்போது, அதற்கெல்லாம் போகக்கூடாது. அப்படிபேசனும்னு சொன்னால், கீழே ரிசப்னிஷ்ட் முன்னாடி அமர்ந்து பேசுங்க அப்படின்னு சொல்லிடனும்.
பிக்பாஸில் இருந்து நான் வெளியில் வந்தவுடன், என்கிட்ட ஒருத்தர் தேதி கேட்கிறார். யாராவது கதையில்லாமல் நடிகைகிட்ட தேதி கேட்பாங்களா. உடனே நாம் புரிஞ்சுகிடணும், அவங்க ஃபிராடுன்னு.
உப்புமா கம்பெனியும் அவுட்டோர் சூட்டும்:
சில உப்புமா கம்பெனி எல்லாம் இருக்கு. அதாவது, பணம் படைத்தவர்கள், கறைபடிந்த அரசியல்வாதிகள் எல்லாம் சிலரை வைச்சு படம் எடுப்பாங்க. அதைப் பயன்படுத்தி ஒரு டீம் ஏமாத்தும். அப்படி ஒரு டீமில் வொர்க் செய்யப்போகும்போது, பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். இதற்கெல்லாம் தான், கமிட்டி வேணும்ன்னு சொல்றது.
ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறவன் எல்லாம் படம் எடுக்க வருகிறான். இதற்காக நிறைய புதுமுக நடிகர்கள், தங்கள் பணத்தை இந்த மாதிரி கம்பெனியில் கொடுத்து ஏமாந்துபோகின்றனர். இதற்கெல்லாம் தான் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் ஒழுங்குமுறை வேண்டும்.
நிறையபேர் உச்ச நடிகர்களிடம் எடுத்த புகைப்படங்களை வைத்து, நான் தான் காஸ்டிங் டைரக்டர் அப்படின்னு சொல்லி புதுமுக நடிகைகளை ஏமாத்துறாங்க. அவங்க செய்யுறதே வேற.
நடிகைகள் அவுட்டோர் சூட் போகும்போது, குடிச்சிட்டு வந்து பலபேர் கதவைத் தட்டுவாங்க. ஆனால், நடிகைகளுக்கு அதை வெளியில் சொன்னால்கூட சப்போர்ட் கிடைக்காதுங்கிற பயத்தில் விட்டுடுறாங்க’’ என்றார்.
நன்றி: கலாட்டா பிங்க்