தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sunaina Rocket Driver: கல்யாண கமிட்மெண்ட்.. கணவன் அறிமுகம்.. கலகல அப்டேட் கொடுத்த சுனைனா! - முழு விபரம் உள்ளே!

Sunaina Rocket Driver: கல்யாண கமிட்மெண்ட்.. கணவன் அறிமுகம்.. கலகல அப்டேட் கொடுத்த சுனைனா! - முழு விபரம் உள்ளே!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 18, 2024 03:25 PM IST

Sunaina Rocket Driver: ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் ஃபேன்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகும் "ராக்கெட் டிரைவர்". இந்தப்படத்தில் சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Sunaina Rocket Driver: கல்யாண கமிட்மெண்ட்.. கணவன் அறிமுகம்.. கலகல அப்டேட் கொடுத்த சுனைனா! - முழு விபரம் உள்ளே!
Sunaina Rocket Driver: கல்யாண கமிட்மெண்ட்.. கணவன் அறிமுகம்.. கலகல அப்டேட் கொடுத்த சுனைனா! - முழு விபரம் உள்ளே!

ட்ரெண்டிங் செய்திகள்

என்ன சொல்ல வருகிறது "ராக்கெட் டிரைவர்"

தான் செய்த தவறுகளால், தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்ததாக மாறிவிட்டதே என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், தனது ரோல் மாடலை அவரது தன்னுடைய 17-வயதில் காண்கிறார்.

அப்போது அரங்கேறும் ஒரு விசித்திர சம்பவம் விபரீதத்தில் முடிகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதையாக பின்னப்பட்டு இருக்கிறது. அறிமுக நாயகன் விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படக்குழு விபரங்கள்

இந்தப் படத்திற்கு கௌஷிக் கிரிஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ரெஜிமல் சூர்யா தாமஸ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை இனியவன் பாண்டியன் கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் கருந்தாமலை, ஷில்பா ஐயர் ஆடை வடிவமைப்பு, சுரேஷ் ரவி டி.ஐ. பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

தயாரிப்பு நிர்வாகியாக செல்வேந்திரன் பணியாற்றும் இந்த படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகளை சங்கரன் மற்றும் சித்தார்த்தா மேற்கொள்கின்றனர். ஒலி கலவையை அரவிந்த் மேனனும், விளம்பர வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ ஹரி சரணும் மேற்கொள்கிறார்கள். அக்ஷய் பொல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் அனந்த சங்கர் இணைந்து எழுதியிருக்கும் இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஆகஸ்ட் 2024-இல் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

முன்னதாக, தமிழில் 'காதலில் விழுந்தேன்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தொடர்ந்து ‘மாசிலாமணி’, ‘திருத்தணி’, ‘வம்சம்’, ‘நீர்ப்பறவை’, ‘தெறி’, ‘கவலை வேண்டாம்’, ‘சில்லுக்கருப்பட்டி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் 'ரெஜினா' என்ற படம் வெளியானது.

35 வயதான சுனைனா திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில், அண்மையில் தான் கமிட் ஆகி விட்டதை அறிவிக்கும் வண்ணம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் ஒரு ஆணின் கைக்குள் சுனைனாவின் கை அடங்கி இருந்தது. மணமகன் மற்றும் திருமணம் குறித்த தகவல்கள் முறைப்படி வெளியிடப்படும் என்று தெரிகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.