தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Sunaina: துபாயை சேர்ந்த யூடியூபர்.. சுனைனா திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை யார்?

Actress Sunaina: துபாயை சேர்ந்த யூடியூபர்.. சுனைனா திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை யார்?

Aarthi Balaji HT Tamil
Jul 02, 2024 07:06 PM IST

Actress Sunaina: துபாயை சேர்ந்த யூடியூபர் காலித் அல் அமெரியை தான் நடிகை சுனைனா காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

துபாயை சேர்ந்த யூடியூபர்.. சுனைனா திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை யார்
துபாயை சேர்ந்த யூடியூபர்.. சுனைனா திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை யார்

Actress Sunaina: நடிகை சுனைனா, தமிழில் குறிப்பிடும்படியான படத்தில் நடித்த நடிகையாவார். தவிர, நடிகை சுனைனா தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்

2006 ஆம் ஆண்டு, சம்திங் ஸ்பெஷல், 10 ஆம் வகுப்பு என்னும் தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார். அதே ஆண்டு, பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் என்னும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமான சுனைனா, அப்படத்தில் காவ்யா என்னும் கதாபாத்திரத்தின் பெயரில் நடித்தார்.

நல்ல மைலேஜ்

மேலும், 2007ஆம் ஆண்டு, மிஸ்ஸிங் என்னும் தெலுங்கு படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்தார். இதற்கிடையே, 2008ஆம் ஆண்டு கன்னட மொழியில் கங்கே பாரே துங்கே பாரே என்னும் படத்தில் நடித்து, அம்மொழியில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன்பின், அதே ஆண்டில் தமிழில் காதலில் விழுந்தேன் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

இதில் அவர் நடித்த மீரா என்னும் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. பின், 2009 ஆம் ஆண்டு, மாசிலாமணி திரைப்படத்தில் திவ்யா ராமநாதன் என்னும் கேரக்டரில் நடித்து பெயர் பெற்றார். இந்த இரண்டு படங்களும், சுனைனாவுக்கு நல்ல மைலேஜை பெற்று கொடுத்தன.

ட்ரெண்டிங் செய்திகள்

2022 ஆம் ஆண்டு லத்தி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் சுனைனா. அதன் பிறகு பெரிதாக படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை.

சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ வெப் தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த தொடரில் இவருக்கு முக்கிய கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதை அவரும் சரியாக பயன்படுத்தி கொண்டார்.

திருமணம் எப்போது?

35 வயதாகும் சுனைனா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதனால் பலரும் அவரிடம் திருமணம் தொடர்பான கேள்விகளை கேட்டு கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் பட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவார்.

சுனைனா ஷாக்கிங் போஸ்ட்

சுனைனா வழக்கத்திற்கு மாறாக ஜூன் 5 தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு பதிவு ஒன்றை வெளியீட்டு இருந்தார். அதில் அவர் யாருடனோ கைக்கோர்த்து இருந்தார். ஆனால் அந்த நபர் யார், அவர் நடிகரா, தொழிலதிபரா அவரை எப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் போன்ற என்ற தகவல்களை அவர் வெளியிடவில்லை.

அந்த நபர், நடிகராகவோ அல்லது தொழிலதிபராக இருக்கலாம் என கூறப்பட்டது.

மாப்பிள்ளை யார்

துபாயை சேர்ந்த யூடியூபர் காலித் அல் அமெரியை தான் சுனைனா காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. திருமணத்திற்காக காலித் அல் அமேரி துபாயிலிருந்து இருந்து இந்தியா வந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

காலித் அல் அமெரி ஏற்கனவே திருமணமானவர். அவர் இந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தான் விவாகரத்து செய்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.