தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ks Ravikumar Pokes Fun At Balakrishna; Says He Once Almost Hit An Assistant For Laughing At His Wig

Director KS Ravikumar: செட்டில் நிஜமாகவே அடிக்க வந்த ஹீரோ..! தெலுங்கு சினிமாவில் நடந்த சம்பவம் - கே.எஸ்.ரவிக்குமார் பகிர

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 08, 2024 08:55 AM IST

தன்னை பார்த்து சிரிப்பவர்களை கண்டால் கோபமடைவார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலய்யா. அப்படியொரு வேடிக்கையான சம்பவம் தனது ஷுட்டிங் ஸ்பாட்டில் நடந்தது குறித்து இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கார்டியன் பட விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு
கார்டியன் பட விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு

ட்ரெண்டிங் செய்திகள்

ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் கார்டியன் படத்தின் நிகழ்ச்சியின் கலந்துகொண்ட கே.எஸ். ரவிக்குமார் அந்த படத்தின் இயக்குநர் சரவணன் பற்றி பேசினார். அப்போது இதுகுறித்து கூறியதாவது:

"செட்டில் யாராவது சிரிப்பதை பார்த்தாலே இவர் எதுக்கு சிரிக்கிறார் என கேட்பார் பாலய்யா. கோப்பட்டு கேட்பார்., அப்படிதான் எனது உதவியாளர் சரவணன் பாலய்யாவிடம் மாட்டிக்கொண்டார். ரசிகர்களை நோக்கி பாலய்யா திரும்பியபோது அவரது விக் லேசாக அசைந்ததை பார்த்து சிரித்துள்ளார்.

இதை கவனித்த பாலய்யா அவரை பார்த்து எதுக்கு சிரித்தாய் என கோப்பட்டு கேட்டார். உடனே நான் சென்று இவர் எனது உதவியாளர்தான் என்றேன். ஆனால் அவர் அதை கேட்காமல் இவர் எதிர் கேங் என கூறி அடிக்கவே பாய்ந்துவிட்டார்.

அப்புறம் ஒரு வழியாக சரவணனை அவரிடமிருந்து காப்பாற்றினேன். அவரிடம் மாட்டிக்கொண்டு அடிவாங்காமல் தப்பித்தார். பாலய்யா பழகுவதற்கு இனிமையானவர். நல்ல மனிதர். ஆனால் எதிலும் ஒரு விதமான சந்தகேத்துடன் இருப்பார்"

இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்