Prasanth: காதல் மன்னனாக வலம் வந்த பிரசாந்த்.. வெட்கத்துடன் லைலா.. பலே வில்லியாக சிம்ரன்.. பார்த்தேன் ரசித்தேன்
Parthen Rasithen: சிம்ரன், கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த காலத்தில் வில்லியாக நடிக்க அவரது நடிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை சிம்ரனிடம் கூற உடனே அவர் ஒப்புக்கொண்டுள்ளார். லைலா நடித்த ரோஜாவனம் படத்தை பார்த்த சரண் அவரை முக்கிய கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
Parthen Rasithen: பார்த்தேன் ரசித்தேன், பிரசாந்த், சிம்ரன், லைலா ஆகியோர் நடிப்பில் முக்கோண காதல் கதையை வைத்து 2000மாவது ஆண்டு வெளியான ரொமாண்டிக் திரில்லர் படம். இந்தப்படத்தில் சிம்ரன் நெகடிவ் ரோல் செய்திருப்பார். சிம்ரன் கதாநாயகியாக கலக்கிய காலகட்டத்தில் இந்தப்படத்தில் துணிந்து எதிர்மறை ரோலும் செய்திருப்பார்.
பொதுவாகவே தமிழ் சினிமா கதாநாயகர்கள் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்திலே நடித்துக்கொண்டு வரும்போது, நெகடிவ் கேரக்டர்களை பண்ண முன்வரமாட்டார்கள். அதாவது வில்லன் கதாபாத்திரம் செய்வதற்கு முன் வர மாட்டார்கள். ஆனால் இந்தப்படத்தில் சிம்ரன் துணிந்து வில்லியாக நடித்திருப்பார்.
பிரசாந்த படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர், ஒரு பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும்போது அந்த வழியாக செல்லும் பேருந்தில் லைலாவை பார்த்து அவருடன் காதலில் விழுந்துவிடுவார். சிம்ரன், பிரசாந்தின் தோழி, தனது அண்ணன் ரகுவரனுடன் வசிக்கும் சிம்ரனுக்கும், அவரது அண்ணனுக்கு பேச்சுவார்த்தை கிடையாது. அதனால் சிம்ரனுக்கு பிரசாந்த் மட்டுமே ஆதரவாக இருப்பார். இதனால் சிம்ரனுக்கு பிரசாந்த் மீது ஈர்ப்பு ஏற்படும்.
பேருந்து பயணம்
லைலாவை பேருந்தில் பயணிக்கும் மற்றொரு பயணி ராகவா லாரன்சும் ஒரு தலையாக காதலிப்பார். ஆனால் பிரசாந்த் மீது உள்ள காதலால், அவர் ராகவா லாரன்ஸை வெறுப்பார். இதனால் லாரன்ஸ் பிரசாந்த் மீது வன்மத்தை வளர்த்துக்கொள்வார். லைலாவை தான் காதலிப்பதை சிம்ரனிடம் பிரசாந்த் கூறும்போது, சிம்ரனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் பிரசாந்துக்கு உதவுவதுபோல் நடிப்பார்.
லைலா, வெகுளி பெண்ணாக கச்சிதமாக நடித்திருப்பார். தன்னிடம் காதல் சொல்ல பிரசாந்த, லாரன்ஸ் இருவரும் ஒரே வேளையில் வந்தபோது அவர் லாரன்ஸை ஒதுக்குவார். ஆனால், தன்னை வெறுப்பதாக பிரசாந்த தவறாக புரிந்துகொள்வார். இவர்களை சேர்க்க காமெடியன்கள் தாமு, சார்லி, வையாபுரி கூட்டணி முயலும், தனது காதலை லைலா ஏற்காததால் பிரசாந்த் மீது வன்மத்தை வளர்த்துக்கொள்ளும் லாரன்ஸ், பிரசாந்துக்கு உதவுவதுபோல் நடிக்கும் சிம்ரன். இவற்றையெல்லாம் சமாளித்து பிரசாந்த் – லைலா காதல் வெற்றி பெருமா என்பதுதான் கிளைமேக்ஸ்.
சிம்ரன் வில்லி
சிம்ரன் தனது அசாத்தியமான நடிப்பில் வில்லியாகவும் கலக்கியிருப்பார். ரகுவரன் வழக்கமான ஜென்டில் ஆக்டிக். இந்தப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியிருப்பார். பரத்வாஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். வா என்றது, பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுடசுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் இன்றும் தாளம் போட வைக்கும் பாடல், எனக்கென ஏற்கனவே உன்னிக்கிருஷ்ணன், ஹரிணி குரலில் காதலை கசிந்துருக வைத்திருக்கும் பாடலாக அமைந்திருக்கும்.
பூவே புன்னகை காட்டு, லைலாவுக்கும், பிரசாந்துக்கு நல்ல டூயட், தனது க்யூட்டான எக்ஸ்பிரசன்களால் பாடலை அழகாக்கியிருப்பார் லைலா. திண்ணாதே பாடலும், கெடலக்கல பாடலும் இன்றும் நினைவில் நிற்கக்கூடிய வகையில் உள்ள பாடல்கள் ஆகும்.
பார்த்தேன், ரசித்தேன் வெளியான காலகட்டத்தில் நல்ல வரவேற்பை பெற்ற படம். சரண் இந்தப்படத்தின் கதையை தனது அண்ணண் வாழ்க்கையில் நடந்த கதை பின்னணியில் உருவாக்கியிருந்தர். சரண் இந்தப்படத்துடனே பிரசாந்தை வைத்து ஹலோ படத்தையும் இயக்கிக்கொண்டிருந்தார்.
சிம்ரன், கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த காலத்தில் வில்லியாக நடிக்க அவரது நடிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை சிம்ரனிடம் கூற உடனே அவர் ஒப்புக்கொண்டுள்ளார். லைலா நடித்த ரோஜாவனம் படத்தை பார்த்த சரண் அவரை முக்கிய கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
இந்தப்படத்தின் காட்சிகள் முக்கால்வாசி பஸ்சில் நடப்பதுதான். இதனால், அன்றாடம் பஸ் போக்குவரத்தை பயன்படுத்துவர்களுடன் படம் நன்றாக கனெக்டாக உதவியது. இந்தப்படம் வெளியாக 24 ஆண்டுகள் ஆகிறது. அந்தப்படம் குறித்து ஹெச்.டி. தமிழ் பகிர்ந்துகொள்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்