தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  27 Years Of Once More: முதன்முறையாக விஜயுடன் ஜோடி சேர்ந்த சிம்ரன்.. ரசிகர்களை ஆட்டம் போட வைத்த 'ஒன்ஸ்மோர்'

27 Years of Once More: முதன்முறையாக விஜயுடன் ஜோடி சேர்ந்த சிம்ரன்.. ரசிகர்களை ஆட்டம் போட வைத்த 'ஒன்ஸ்மோர்'

Karthikeyan S HT Tamil
Jul 04, 2024 06:42 AM IST

27 Years of Once More: விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான 'ஒன்ஸ்மோர்' படத்தில் தமிழ் சினிமாவின் எவர்கீரின் ஜோடிகளுள் ஒன்றான சிவாஜி கணேசன், சரோஜா தேவியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.

27 Years of Once More: முதன்முறையாக விஜயுடன் ஜோடி சேர்ந்த சிம்ரன்.. ரசிகர்களை ஆட்டம் போட வைத்த 'ஒன்ஸ்மோர்'
27 Years of Once More: முதன்முறையாக விஜயுடன் ஜோடி சேர்ந்த சிம்ரன்.. ரசிகர்களை ஆட்டம் போட வைத்த 'ஒன்ஸ்மோர்'

முதன்முறையாக ஜோடி சேர்ந்த சிம்ரன்

அன்றைய காலகட்டத்தில் விஜய்யின் வழக்கமான படங்களை போலவே காதல், காமெடி, சென்டிமென்ட் என அட்டகாசமாக உருவாகி இருந்தது 'ஒன்ஸ்மோர்'. இந்தப்படத்தில் தான் சிம்ரன் விஜய்யுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்தார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் தமிழ் சினிமாவின் எவர்கீரின் ஜோடிகளுள் ஒன்றான சிவாஜி கணேசன், சரோஜா தேவியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். மணிவண்ணன், எஸ்.எஸ்.சந்திரன் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

தந்தையாக நடித்த சிவாஜி

ஊட்டியில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு நிர்வாக இயக்குனராக இருக்கும் விஜய்யின் நிர்வாகத்தால், தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. நஷ்டத்தை சமாளிப்பதற்காக அமெரிக்காவில் இருக்கும் தனது தந்தையை அழைக்கிறார். வரும் வழியில் விமான விபத்தில் அவரது தந்தை உயிரிழந்துவிடுகிறார். தொழிலில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்ய முதியோர் இல்லத்தில் இருக்கும் சிவாஜியை தன் தந்தையாக நடிக்க வைக்கிறார் விஜய். ஒவ்வொரு காட்சியிலும் விஜய் தனக்கே உரிய துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து நடக்கும் சம்பவங்களில் சிவாஜி, சரோஜா தேவி ஆகியோரின் பழைய காதல் பற்றியும், 30 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்வது பற்றியும் விஜய்க்கு தெரிய வருகிறது. இதனிடையே விஜய் - சிம்ரன் இடையே காதல் ஆரம்பிக்கிறது. சிவாஜியின் காதலை ஒன்று சேர்க்க, விஜய்யும் இவரின் காதலை ஒன்று சேர்க்க, சிவாஜியும் முயற்சிக்கின்றனர் என்பது தான் படத்தின் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருந்தது.

ஹிட் பாடல்கள்

தேனிசைத் தென்றல் தேவாவின் துள்ளலான இசையில் 'ஊட்டி மலை பியூட்டி', 'பூவே பூவே பெண்பூவே', 'ஊர்மிளா ஊர்மிளா' 'சின்ன சின்ன காதல்' போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இந்தப் படத்தில் சிம்ரன், சிவாஜி கணேசன் இருவரும் சேர்ந்து நடிக்கும் ஒரு காட்சியை படமாக்க எஸ்.ஏ.சி திட்டமிட்டுள்ளார். காலையில் 8 மணிக்கு ஷூட்டிங் என்பதால், சிவாஜி கணேசன் வழக்கம்போல ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மேக்கப் போட்டுக்கொண்டு தயாராகிவிட்டார். ஆனால், சிம்ரன் பொறுமையாக 10 மணிக்கும் மேல் படப்பிடிப்புக்கு வந்துள்ளார்.

கோவப்பட்ட சிவாஜி

இதனால் சிவாஜி கொஞ்சம் டென்ஷனாகிவிட்டதாக தெரிகிறது. இதை புரிந்துகொண்ட எஸ்.ஏ சந்திரசேகர், சிம்ரனை கடிந்துகொண்டதோடு மட்டுமல்லால் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு சிம்ரனை வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டாராம் எஸ்.ஏ சந்திரசேகர். அதன்பிறகு சிவாஜி டென்ஷனாக இருந்ததைப் பார்த்த சிம்ரன், அவரை கூல் செய்வதற்காக காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுள்ளார். அதன் பின்னரே அந்தக் காட்சியை படமாக்கியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

27 ஆண்டுகள் நிறைவு

இப்படியாக உருவான 'ஒன்ஸ்மோர்' திரைப்படம் 1997-ஆம் ஆண்டு இதே ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. காலங்கள் உருண்டோடி 27 ஆண்டுகளை கடந்திருந்தாலும் விஜய் – சிம்ரன் இடையிலான காதல் காட்சிகள் இன்றைக்கும் ரசிக்கும் அளவுக்கு உள்ளது கூடுதல் சிறப்பு. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்