Mantra: “லாயர் ஆகணும்னு ஆசப்பட்டேன்.. அப்பாதான் இதுல தள்ளி விட்டு.. கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தி..” -மந்த்ரா!-mantra latest interview actress mantra says tamil cinema only used me for glamor roles but not telugu cinema - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mantra: “லாயர் ஆகணும்னு ஆசப்பட்டேன்.. அப்பாதான் இதுல தள்ளி விட்டு.. கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தி..” -மந்த்ரா!

Mantra: “லாயர் ஆகணும்னு ஆசப்பட்டேன்.. அப்பாதான் இதுல தள்ளி விட்டு.. கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தி..” -மந்த்ரா!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 30, 2024 07:10 AM IST

Mantra: “நான் தெலுங்கில் அதிக படங்களில் நடித்ததற்கான காரணமும் அதுதான். தமிழில் அப்படி கூப்பிட்டால் நான் என்ன நடிக்க மாட்டேன் என்றா சொல்லியிருக்கப் போகிறேன். அவர்கள் அந்த நோக்கத்தில் என்னை பார்க்கவே இல்லை.” - நடிகை மந்த்ரா!

Mantra: “லாயர் ஆகணும்னு ஆசப்பட்டேன்.. அப்பாதான் இதுல தள்ளி விட்டு.. கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தி..”  -மந்த்ரா!
Mantra: “லாயர் ஆகணும்னு ஆசப்பட்டேன்.. அப்பாதான் இதுல தள்ளி விட்டு.. கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தி..” -மந்த்ரா!

வழக்கறிஞர்தான் என்னுடைய கனவு

இது குறித்து குமுதம் யூடியூப் சேனலுக்கு அண்மையில் அவர் கொடுத்த பேட்டியில் பேசும் போது, “ நான் வழக்கறிஞராக மாற வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். இயல்பாகவே எனக்கு வாதாடும் திறமை இருப்பதால், வீட்டில் என்ன பிரச்சினை என்றாலும், என்னைதான் எல்லோரும் அழைப்பார்கள். ஆனால், என்னுடைய அப்பா, நான் பெரிய நடிகையாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர்தான் என்னை இந்தத்துறையில் தள்ளி விட்டார். நான் பிறந்த ஆறாவது மாதத்தில் இருந்து திரைத்துறையில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

 

நடிகை மந்த்ரா!
நடிகை மந்த்ரா!

என்னுடைய அப்பாவிற்கு திரைத்துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அது நிறைவேற வில்லை. என்னுடைய அப்பா சிகரெட் பிடிப்பார். அவர் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கும் போது, யாராவது பெரிய ஆள் அவர் முன்னால் வந்தால், சிகரெட்டை முதுகுக்கு பின்னால் மறைத்துக்கொண்டு அவர்களுக்கு வணக்கம் வைப்பார்.

அது அவருக்கு சுத்தமாக பிடிக்காது. அவருக்கு ஒரு கனவு இருந்தது. வொயிட் அண்ட் வொயிட் ஆடைகளை உடுத்திக் கொண்டு, கால் மேல் கால் போட்டு கொண்டு, யாருக்கும் வணக்கம் வைக்காமல் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். அவர் முன்னால் வருபவர்கள் அவருக்கு வணக்கம் வைக்க வேண்டும் என்று.. அந்த கனவை நான் நிறைவேற்றி விட்டேன்.

கவர்ச்சியான கதாபாத்திரங்களில்

எனக்கு கவர்ச்சியான கதாபாத்திரத்திங்களில் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு கிடையாது. எனக்கு சேலைதான் பிடிக்கும்.என்னுடைய வீட்டில் அதிக அளவு சேலைகள் தான் இருக்கின்றன. வீட்டில் இருக்கும் போது கூட, நான் ஜீன்ஸ் டீ சர்ட் அணிய மாட்டேன். சல்வார்தான் அணிவேன்.

மந்த்ரா
மந்த்ரா

எப்போதுமே ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரேஷன் என்று சொல்வார்கள். ‘பிரியம்’ படத்தில்தான் நான் நடிகையாக அறிமுகமானேன். அந்தப்படம் கமர்ஷியலாக உருவாக்கப்பட்டது. அதில் என்னுடைய கதாபாத்திரம் முழுக்க, முழுக்க கிளாமராக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதனால், பிற தயாரிப்பாளர்களும் அப்படியே என்னை நடிக்க கேட்டார்கள்.

நீங்கள் ரம்பாவை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் குறைவான ஆடைகளில்தான் பார்க்க ஆசைப்படுவீர்கள் தவிர, சேலையில் பார்க்க ஆசைப்பட மாட்டீர்கள். அவர்களது அறிமுகம் அப்படி இருந்த காரணத்தால், அடுத்தடுத்த படங்களிலும் அவர் அப்படியான கதாபாத்திரங்களிலேயே நடித்தார்.

ஆனால், நான் தெலுங்கில் ஸ்லீவ்லெஸ் கூட போட்டு நடித்ததில்லை. ஸ்விம்மிங் காட்சிகளில் நடித்ததில்லை. காரணம், நான் அங்கு அப்படி நடித்தால், பார்வையாளர்கள் பார்க்க மாட்டார்கள். நான் தெலுங்கில் அதிக படங்களில் நடித்ததற்கான காரணமும் அதுதான். தமிழில் அப்படி கூப்பிட்டால் நான் என்ன நடிக்க மாட்டேன் என்றா சொல்லியிருக்கப் போகிறேன். அவர்கள் அந்த நோக்கத்தில் என்னை பார்க்கவே இல்லை. என்னுடைய கதாபாத்திரங்களை கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். தமிழ் ரசிகர்களும் அப்படித்தான் என்னை பார்க்க ஆசைப்பட்டார்கள் அதனால் தான் அது நடந்து கொண்டே இருந்தது” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.