Shakeela: நடிகரின் கன்னத்தைக் கிள்ளி.. சுற்றிப் போட்ட நடிகை ஷகிலா.. சூழ்ந்த கூட்டம்-actress shakeela express her hapiness to actor soori - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shakeela: நடிகரின் கன்னத்தைக் கிள்ளி.. சுற்றிப் போட்ட நடிகை ஷகிலா.. சூழ்ந்த கூட்டம்

Shakeela: நடிகரின் கன்னத்தைக் கிள்ளி.. சுற்றிப் போட்ட நடிகை ஷகிலா.. சூழ்ந்த கூட்டம்

Malavica Natarajan HT Tamil
Oct 02, 2024 07:55 PM IST

Shakeela: திரைத்துறையில் மாபெரும் நடிகராக உயர்ந்துவரும் சூரிக்கு நடிகை ஷகிலா திருஷ்டி கழிக்க சுற்றிப் போட்ட சம்பவம் கோலிவுட்டில் வைரலாகி வருகிறது.

Shakeela: நடிகரின் கன்னத்தைக் கிள்ளி.. சுற்றிப் போட்ட நடிகை ஷகிலா.. சூழ்ந்த கூட்டம்
Shakeela: நடிகரின் கன்னத்தைக் கிள்ளி.. சுற்றிப் போட்ட நடிகை ஷகிலா.. சூழ்ந்த கூட்டம்

இந்த நிலையில், சூரிக்கு எந்த திருஷ்டியும் படக்கூடாது. அவர் மேலும் பல உயரத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுரைக் கூறி நடிகை ஷகிலா திருஷ்டி கழித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

சூரியின் திரைப் பயணம்

இங்கு எல்லா சினிமாக்காரனுக்கும் ஒரே கதை தான் என்பதைப் போல மதுரையில் பிறந்து வளர்ந்த சூரிக்கும் சினிமா ஆசை துரத்தியது. இதனால், மதுரையிலிருந்து சென்னை புறப்பட்டு வந்தார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்து போகாத அவர், சினிமா படப்பிடிப்பு எடுக்கும் இடங்களுக்கு சென்று அங்கு கிடைக்கும் வேலையை செய்ய ஆரம்பித்தார். பின் சினிமா செட் போடும் தொழிலில் அஸிஸ்டெண்ட்டாக பணியாற்றினார்.

முதல் காட்சி

இதையடுத்து, இவர் முதன்முதலாக நடிகர் மம்முட்டியின் மறுமலர்ச்சி படத்தில் தான் ஒரு காட்சியில் நடித்துள்ளார். பின் அவர் எவ்வளவு முயன்றும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வாய்ப்பளித்த சுசீந்திரன்

இதற்கிடையில், சினிமா படப்பிடிப்பின் போது, இயக்குநர் சுசீந்திரனுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரது வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில், 50 பரோட்டாவை சாப்பிடுவதாகக் கூறி பந்தயத்தில் இறங்கும் சூரி, எல்லாக் கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன் எனக் கூறும் போது மக்களின் கவனத்தை பெறுகிறார். இந்தப் படத்தில் கிடைத்த புகழ் வெளிச்சம் தான் அவரது பெயருக்கு முன் பரோட்டாவை சேர்க்க வைத்தது. அதுமட்டுமின்றி, அவரும் பரோட்டாவினாலே அடையாளம் காணப்பட்டார்.

தூக்கிவிட்ட சிவகார்த்திகேயன்

இதையடுத்து சினிமாவில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்த சூரிக்கு சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் முன்னேற்றத்தை அளித்தது.

இதைத் தொடர்ந்து படிப்படியாக விஜய், அஜித், ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

நாகேஷ், சந்திரபாபு காலம் போல், கவுண்டமனி செந்தில் காலம் போல், சூரியின் காலத்தையும் தமிழ் சினிமா கண்டது.

வெற்றிமாறனின் நாயகன்

இந்த சமயத்தில் தான், சூரிக்குள் ஒளிந்திருக்கும் கதாநாயகனை கண்டெடுத்தார் இயக்குநர் வெற்றிமாறன். இவர் தனது இயக்கத்தில் உருவான விடுதலை படத்திற்கு கதாநாயகனாக சூரியை தேர்ந்தெடுத்தார். அத்தோடு நில்லாது, இத்தனை நாள் வெறும் காமெடி நடிகனாக அறியப்பட்ட சூரி, வெற்றிமாறனின் கைவண்ணத்தில் சிக்ஸ் பேக் சூரியாக மாறினார்.

வெற்றிமாறன் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பைத் தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை போன்ற திரைப்படத்திலும் பயன்படுத்தி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இதனால் சூரி காமெடியன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தாரா எனும் கேட்கும் அளவுக்கு பல இடங்களில் இருந்தும் நாடுகளில் இருந்தும் இவருக்கு விருதுகளும் பாராட்டும் வந்த வண்ணம் இருக்கிறது.

திருஷ்டி கழித்த ஷகிலா

இதனிடையே தான், நடிகை ஷகிலா சூரியின் வளர்ச்சியை பார்த்து வியந்து பாராட்டி அவருக்கு அறிவுரை அளித்துள்ளார். நடிகர் சூரியை சந்தித்த ஷகிலா, அவரின் கன்னத்தை கிள்ளி பாரட்டு தெரிவித்தார். அத்தோடு நில்லாமல், சூரி மேல் விழுந்திருக்கும் திருஷ்டிகளை கழிக்கவும் செய்தார். மேலும், ஒரு சகோதரியாக அவர் சினிமாவில் இனி எப்படி செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தை இப்போது கலக்கி வருகிறது.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.