கேள்விகளால் கடுப்பேற்றிய ரசிகர்கள்.. நச்சுன்னு பதிலடி கொடுத்த நடிகை சமந்தா..என்ன சொன்னார் தெரியுமா?
தனது உடல் எடை குறித்த விமர்சனங்களுக்கு நடிகை சமந்தா "வாழு வாழவிடு" என பதிலடி கொடுத்திருப்பது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் சினிமா மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என இந்திய அளவில் தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் நடிகை சமந்தா. பலப் போராட்டங்களை எதிர்கொண்டு இன்று திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இந்த சூழலில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்வில் இருந்து வந்தார். தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டில் டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிட்டாடல் ஹனி பன்னி' (Citadel: Honey Bunny) என்ற வெப் சீரிஸிலும் சமந்தா நடித்துள்ளார். இதற்கான புரமோஷன்கள் வேலைகளில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெப் சீரிஸில் ஆக்ஷன் பறக்கும் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார் சமந்தா.
ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா
இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து லைவ்வில் உரையாடினார் சமந்தா. அதில், ரசிகர்கள் ஒருவர் கூறிய கருத்தால் சமந்தா கவர்ந்தார். மற்றொரு நெட்டிசன் வைத்த கோரிக்கையால் சமந்தா கோபத்தில் இருக்கிறார். ஆம், ரசிகர் ஒருவர் சமந்தாவை 'கொஞ்சம் உடல் எடையை அதிகரிக்குமாறு' கமெண்ட் செய்திருந்தார்.