என்னை அழகா இருக்கீங்கன்னு யாரும் சொன்னதே இல்லை.. பிரேமம் ரிலீஸின்போது பயந்திருக்கேன்.. ஓபனாக பேசிய நடிகை சாய் பல்லவி!
என்னை அழகா இருக்கீங்கன்னு யாரும் சொன்னதே இல்லை என்றும்; பிரேமம் ரிலீஸின்போது பயந்திருக்கேன் என்றும் ஓபனாக பேசிய நடிகை சாய் பல்லவியின் பேட்டி குறித்து பார்ப்போம்.
தன்னை அழகாக இருக்கீங்கன்னு யாரும் சொன்னதே இல்லை என்றும்; பிரேமம் ரிலீஸின்போது பயந்திருக்கேன் என்றும் ஓபனாக பேசிய நடிகை சாய் பல்லவி பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு நடிகை சாய் பல்லவி அளித்த பேட்டியின் தொகுப்பு இது:
அமரன் படத்தில் நடித்த கேரக்டர் ரொம்ப பிடிச்சிருந்ததா?
பதில்: சில நேரம் நம்ம யோசிப்போம்ல வீராங்கனை மாதிரி பண்ணனும்னு. அப்போது கார்கி மாதிரி ஸ்கிரிப்ட்கள் தான் நிறைய வந்தது. எனவே, ஸ்ட்ராங்கான ஒரு பெண் பற்றியான கதைகள் கிடைத்தால் பண்ணலாம்ன்னு நினைத்தேன். அப்போது தான் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சார் இந்தக் கதையைக் கொண்டுவந்தாங்க.
அவரை எனக்கு நிறைய வருடங்கள் தெரியும். முதலில், இவ்வளவு எளிமையான கதையைக் கொண்டு வந்திருக்கீங்களேன்னு சொன்னேன். அதற்கு, அந்தக் கதாபாத்திரத்தை உண்மையில் சந்தித்ததற்குப் பின், நீங்கள் முடிவுஎடுங்கள் என்று சொன்னார். அதன்பின், தான் நான் இந்துவை சந்தித்தேன். அடுத்து அந்த ஸ்கிரிப்ட்டை படிச்சுப் பார்த்துட்டு ஒரு நேரஷன் ஒன்று கொடுத்தார்.
அடுத்து படம் பண்ணலாம்ன்னு முடிவு எடுத்துட்டேன். அடுத்து பயோபிக் படங்களில் எல்லாம் பெண்கள் கதாபாத்திரத்தை பெரியளவில் எடிட்டில் கட் பண்ணியிருவாங்க அப்படின்னு இயக்குநர் ராஜ்குமார் சார்கிட்ட கேட்டேன். அவர் தான் முகுந்த் கேரக்டருக்கு இணையான கேரக்டர் இந்துவோடது அப்படின்னு சொன்னாங்க.
நீங்கள் சோசியல் மீடியாவில் இல்லாத சமயத்தில் சினிமாவுக்குள் வந்திட்டு, இப்போது சோசியல் மீடியா பெரியளவில் வளர்ந்ததுக்குப் பின் சினிமாவில் வளர்ந்ததை எப்படி பார்க்குறீங்க?
பதில்: என்னுடைய முதல் படம் பண்ணிட்டு ஜார்ஜியா போனதுக்குப்பின், என்னுடைய போட்டோவை நிறைய பேர் டிஸ்பிளே பிக்சராக வைச்சிருந்தது புதுசாக இருந்தது. நாம என்ன அழகவா இருக்கோம். நம்மளை டிஸ்பிளை பிக்சர் வைச்சிருக்காங்களேன்னு நினைச்சேன்.
நாம அழகாகவா இருக்கோம்ன்னு சொல்லியிருக்கீங்க. நாம் அழகாக இல்லை அப்படிங்கிற ஒரு ஃபீல் இருந்திட்டு இருந்திருக்கா?
பதில் - அம்மா எப்போதுமே நீ ரொம்ப அழகாக இருக்க அப்படின்னு சொல்லிட்டே இருப்பாங்க. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அப்படின்னு நினைச்சு, அவங்களை எப்போதுமே கிண்டல் செய்வேன். அப்புறம் அதற்கு ஒரு ஆதாரம் தேடுவோம்ல. இரண்டு, மூன்று பசங்க சொன்னங்கன்னா பார்ப்போம்ன்னு. ஆனால், எல்லோருமே என்னைப் பார்த்தால் பயப்படுவாங்க. ஏனென்றால், அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால் என்கூட யாருமே பேசமாட்டாங்க. அது ஒரு ஃபீல். ஏனென்றால், என் ஃப்ரெண்ட்ஸ்ங்க எல்லாம் இரண்டு, மூன்று பசங்க கூட பேசிட்டு இருப்பாங்க. அடுத்து ஜார்ஜியாவுக்குப் படிக்கப்போனால், அங்க சுத்தமாகவே யாரும் நம்மளை கண்டுக்கவே இல்லை.
சின்ன வயதில் முகப்பருவை பார்த்துட்டு பெரியவங்க வந்து ஏன் இப்படி குதறியிருக்கு அப்படின்னு சொல்லிட்டுப்போவாங்க. இதனால், நாம் அழகாக இல்லையோ அப்படின்னு ஃபீல் இருந்திருக்கு. நம்ம ஃபிரெண்ட்ஸ்கள்கிட்ட எல்லாம், பசங்க அழகாக இருக்கன்னு சொல்லி, நம்மகிட்ட அவங்க சொல்லாத போதும் ஒரு ஃபீல் இருந்திருக்கு. ஆனால், அம்மா மட்டும் தான் நீ அழகாக இருக்க அப்படின்னு சொல்லிட்டே இருந்தாங்க.
பிரேமம் ரிலீஸாகும்போது பயந்துகொண்டே இருக்கேன். நாம் தான் நினைக்கிறோம் உடலாக நாம் ரொம்ப அழகாக இல்லைன்னு. நாம் செய்யும் கதாபாத்திரம் அழகாக இருந்தால் நாமளையும் கொண்டாடுவாங்கன்னு புரியுது.
உங்களை நீங்கள் அழகா இருக்கீங்க அப்படின்னு யாராவது சொன்ன மொமென்ட் எப்போது நடந்தது?
பதில் - அது எனக்கு நடக்கவே இல்லை. இந்த ஜெனரேஷன் பசங்களுக்குத் தான் எல்லோரையும் வெளிப்படையாக வர்ணிக்க முடியுது. ஆனால், அப்ப இருக்கிறவங்களுக்கு, ஐ லக் யூன்னு மட்டும் தான் சொல்லுவாங்க. வர்ணிக்க எல்லாம் வராது. பொண்ணுங்க அழகாக இருக்கீங்கன்னு சொன்னால், நான் நம்புவேன்’’ என பேசினார், நடிகை சாய் பல்லவி.
நன்றி: பிஹைண்ட் வுட்ஸ்!
டாபிக்ஸ்