HBD Sai Pallavi : மலர்.. சிம்பிள் என்றாலே இவர் தான்.. இளைஞர்களின் கனவு கன்னி.. நடிகை சாய் பல்லவி பிறந்த நாள் இன்று!
HBD Sai Pallavi : சாய் பல்லவி இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மலர்.. சிம்பிள் என்றாலே இவர் தான்.. இளைஞர்களின் கனவு கன்னி.. நடிகை சாய் பல்லவி பிறந்த நாள் இன்று!
பிரேமம் திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக மலையாளம் மட்டுமில்லாமல், தமிழிலும் ஏகோபித்த ரசிகர்களை பெற்ற இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான கதாநாயகியாக வலம் வருகிறார்.
நீலகிரி மாவட்டத்தில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்தவர் சாய் பல்லவி, ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து பட்டம் பெற்றவர். ஆனால் மருத்துவராகப் பதிவு செய்துகொள்ளாமல் தன் தாய்வழியாக நடனம் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் தொலைக்காட்சி நடனப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
200 நாட்களுக்கு மேல் ஓடிய படம்
‘கஸ்தூரிமான்’, ‘தாம்தூம்’ திரைப்படங்களில் பெயரிடப்படாத வேடங்களில் தலைகாட்டியவர் 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் பிரபலமானார். தமிழகத்தில் அந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.