பயத்தில் இருக்கும் புஷ்பா நடிகை.. என்னை இப்படி நினைச்சிட்டாங்களே.. ஒரே புலம்பல்.. பாவம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பயத்தில் இருக்கும் புஷ்பா நடிகை.. என்னை இப்படி நினைச்சிட்டாங்களே.. ஒரே புலம்பல்.. பாவம்..

பயத்தில் இருக்கும் புஷ்பா நடிகை.. என்னை இப்படி நினைச்சிட்டாங்களே.. ஒரே புலம்பல்.. பாவம்..

Malavica Natarajan HT Tamil
Dec 09, 2024 10:15 AM IST

தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தன்னை தொடர்ந்து ஐட்டம் பாடல்களுக்கு மட்டும் நடனமாட இயக்குநர்கள் கூப்பிடுவார்களோ என்ற பயத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

பயத்தில் இருக்கும் புஷ்பா நடிகை.. என்னை இப்படி நினைச்சிட்டாங்களே.. ஒரே புலம்பல்.. பாவம்..
பயத்தில் இருக்கும் புஷ்பா நடிகை.. என்னை இப்படி நினைச்சிட்டாங்களே.. ஒரே புலம்பல்.. பாவம்..

இதனால், இப்போது அவருக்கு தொடர்ச்சியான ஐட்டம் பாடல்களில் நடனமாட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கிடையில், மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்த விஸ்வாம்பரா படத்தில் ஸ்ரீலீலாவிற்கு ஒரு ஐட்டம் பாடல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

முதலிடத்தில் ஸ்ரீலீலா

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் டோலிவுட்டில் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகளின் பட்டியலில் ஸ்ரீலீலா முதலிடத்தில் உள்ளார். ஆனால், அவரது கடைசி படங்களில் நான்கு நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் அவர் இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவர் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் ட்ரெண்டிங்

இவர் குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து மடக்கி குத்து எனும் பாடலுக்கு ஆடிய நடனம் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இதையடுத்து அவர், தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூனுடன் சேர்ந்து புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா ஆடிய நடனம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தப் பாடல் யூடியூபில் வெளியான சில மணி நேரத்திலேயே அதிக பார்வையாளர்களைப் பெற்றது. இவரது நடன அசைவுகள் பார்ப்போரை கவர்ந்திழுப்பதால் இவருக்கு தொடர்ந்து ஐட்டம் பாடல் வாய்ப்பைத் தேடி தருகிறதாம்.

ஐட்டம் கேர்ள் முத்திரை

இதனால் தன்னை ஐட்டம் சாங் கேர்ள் என்ற முத்திரை குத்தி விடுவார்களோ என்ற பயம் ஸ்ரீலீலாவிற்குள் ஏற்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அவர் இனி ஐட்டம் பாட்டுகளுக்கு நடனமாடப் போவதில்லை என்ற முடிவில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புஷ்பா

'புஷ்பா: தி ரைஸ்'ஸின் தொடர்ச்சியான 'புஷ்பா2: தி ரூல்' படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பா ராஜாகவும், அவரது மனைவியாக வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.

முன்னதாக, 'புஷ்பா: தி ரைஸ்' படத்தில் இடம்பெற்ற 'ஊ அண்டாவா' பாடல் உலகளவில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாக மாறியது. இந்தப்பாடலில், நடிகை சமந்தா அல்லு அர்ஜூனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு இருந்தார். இந்த நிலையில், அடுத்த பாகத்தில் இடம் பெறும் சிறப்பு பாடலில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஸ்ரீலீலா நடனமாடினார்.

கவனம் செலுத்திய அல்லு அர்ஜூன்

புஷ்பா படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு அல்லு அர்ஜூன் கதையம்சம் உள்ள படத்தில் நடிப்பதற்காக வேறு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல், முழுக்க 'புஷ்பா 2' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

புஷ்பா திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமல்லாது, ரஷ்ய, ஜப்பானிய மற்றும் சீன மொழிகளிலும் டப் செய்து வெளியான நிலையில், அனைத்து மொழி மக்களிடமும் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா போல ஸ்ரீலீலாவும் புகழ் பெற உள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.