Actress Padmapriya: இங்கு பெண்களின் கேரக்டர் இவ்வளவு தான்.. வாயைத் திறந்தாலே பிரச்சனை தான்.. வேதனையில் பத்மபிரியா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Padmapriya: இங்கு பெண்களின் கேரக்டர் இவ்வளவு தான்.. வாயைத் திறந்தாலே பிரச்சனை தான்.. வேதனையில் பத்மபிரியா!

Actress Padmapriya: இங்கு பெண்களின் கேரக்டர் இவ்வளவு தான்.. வாயைத் திறந்தாலே பிரச்சனை தான்.. வேதனையில் பத்மபிரியா!

Malavica Natarajan HT Tamil
Oct 02, 2024 04:23 PM IST

Actress Padmapriya: திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கும் பிரச்சனை குறித்து பேசினால்அவர்களே இங்கு பிரச்சனையாக்கப்படுவார்கள் என நடிகை பத்மபிரியா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Actress Padmapriya: இங்கு பெண்களின் கேரக்டர் இவ்வளவு தான்.. வாயைத் திறந்தாலே பிரச்சனை தான்.. வேதனையில் பத்மபிரியா!
Actress Padmapriya: இங்கு பெண்களின் கேரக்டர் இவ்வளவு தான்.. வாயைத் திறந்தாலே பிரச்சனை தான்.. வேதனையில் பத்மபிரியா!

இவர் தற்போது பேசியுள்ள விவகாரம் திரையுலகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

திரைத்துறையில் பெண்களுக்கென சில கதாப்பாத்திரங்களை மட்டுமே வைத்துள்ளனர். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து பேச முற்பட்டால், அவர்களையே பிரச்சனையாக்கி விடுகின்றனர் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தவமாய் தவமிருந்து

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் தன் எதார்த்த நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பத்மபிரியா. இவர் தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் சேரனுக்கு நாயகியாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் கல்லூரி படிக்கும் போதே காதலனால் திருமணத்திற்கு முன் கர்ப்பமான பத்மபிரியா, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வார். 

பின், கல்லூரி படிப்பிற்காகவும், தங்களது அன்றாட செலவுகளுக்கும் சேரனும் பத்மபிரியாவும் படும்பாடுகளை தனது எதார்த்த நடிப்பில் வெளிப்படுத்தி இருப்பார். மேலும், காதல் கணவரின் குடும்பத்தில் சேர்ந்து எப்படி தங்களது வாழ்க்கையை கொண்டு செல்கிறார் என்பதை மிக அருமையாக வாழ்ந்து காட்டியிருப்பார்.

மிருகம் படத்தில் பளார்

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்தில், கதாநாயகனை கவர பல முயற்சியை எடுக்கும் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

இவரின் கோலிவுட் கெரியரில் முக்கியமாக அமைந்த 2 திரைப்படங்கள் முக்கியமானவை. ஒன்று மிருகம் திரைப்படம். மற்றொன்று சத்தம் போடாதே.

தற்போது மிருகம் படத்தில் நடித்தபோது நடந்த சம்பவம் குறித்து பேசியது பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து பேசுகையில், மிருகம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நான் உணர்வுப்பூர்வமாக நடிக்கவில்லை என இயக்குநர் என்னை பளார் என அறைந்தார். இந்த விவகாரத்தை நான் நடிகர் சங்கத்திற்கு கொண்டு சென்றேன். இதன் விளைவு, என்னை நாயகியாக வைத்து அடுத்தடுத்த திரைப்படங்களை எடுப்பதாக உறுதியளித்த பலரும் வாய்ப்பு கொடுக்கமால் நழுவி சென்றனர்.

வாயைத் திறந்தாலே பிரச்சனை தான்

இங்கு திரைத்துறையில் பெண்கள் அவர்களின் பிரச்னையைப் பேசினாலே அது மிகப் பெரியதாக மாற்றப்படுவதுடன், பிரச்சனை குறித்து பேசியவர்களையே பிரச்னையாக மாற்றிவிடுகின்றனர் என வேதனை தெரவித்தார்.

மேலும் சினிமாவில், ஆண்களுக்குக் கொடுக்கப்படுவது போன்ற பலமான கதாபாத்திரங்கள் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இன்றைய சினிமாவில் பெண்களுக்கு அழகான கதாநாயகி, மனமுடைந்த கதாநாயகி, நடன மங்கையாக வரும் கதாநாயகி என்ற கதாப்பாத்திரங்கள் மட்டுமே பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. வெளி இடங்களில் மட்டுமல்ல, சினிமாவிலும் பாலின பாகுபாடு, பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்து பேசியே ஆக வேண்டும். இல்லையெனில், அது உங்களை மீண்டும் மீண்டும் காயப்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.

ஹேமா கமிட்டி

முன்னதாக, கேரள திரையுலகை ஆட்டம் காணவைத்த ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதும் மலையாள நடிகர் சங்கத்தின் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதுகுறித்து பேசிய நடிகை பத்மபிரியா, மலையாள நடிகர் சங்கத்தினர் அனைவரும் முதுகெலும்பு அற்றவர்கள் என விமர்சித்திருந்தார்.

மிருகம் திரைப்படத்தில் அறை வாங்கியதாக கூறிய இவர், அந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசின் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner