இது முடிவில்லாத காதல்.. வருங்கால கணவரை அறிமுகம் செய்த கீர்த்தி சுரேஷ்.. விரைவில் டும் டும் டும்..
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், அவர் தன் காதலன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மலையாள நடிகை மேனகா, சினிமா தயாரிப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோரின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வரும் இவர் பாலிவுட் சினிமா ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இதையடுத்து கீர்த்தி சுரேஷ் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. உறவுக்காரர் ஒருவரை அவர் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.
காதலை கன்ஃபார்ம் செய்த கீர்த்தி
இந்நிலையில், இன்று கீர்த்தி சுரேஷ் தனது வருங்கால கணவர் குறித்த அறிவிப்பை அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், "15 வருடங்கள் முடிந்தது, இன்னும் எங்கள் பந்தததிற்கான நாட்கள் முடிவில்லாமல் தொடந்துகொண்டே இருக்கும். இது எப்போதும் கீர்த்தி மற்றும் ஆண்டனியின் உறவாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
