இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை..அரசின் செயல்பாடு நன்கு புரிந்து கொள்ளலாம் - கஸ்தூரி பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை..அரசின் செயல்பாடு நன்கு புரிந்து கொள்ளலாம் - கஸ்தூரி பேச்சு

இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை..அரசின் செயல்பாடு நன்கு புரிந்து கொள்ளலாம் - கஸ்தூரி பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 29, 2024 06:32 PM IST

மீண்டும் சர்ச்சையாக பேச விரும்பவில்லை. இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் மூலம் அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்ளலாம் என்று நடிகை கஸ்தூரி பேசியுள்ளார்.

இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை..அரசின் செயல்பாடு நன்கு புரிந்து கொள்ளலாம் - கஸ்தூரி பேச்சு
இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை..அரசின் செயல்பாடு நன்கு புரிந்து கொள்ளலாம் - கஸ்தூரி பேச்சு

இதையுடுத்து சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து செய்தியாளார்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, அப்போது அவர், "நான் தலைமறைவாக இருந்தேன் என்பது உண்மை இல்லை. கடந்த நான்கு வருடங்களாக ஹைதராபாத்தில் வசித்து வருகிறேன். என் மகன் அகில் படிக்கிறார். பிறகு நான் ஏன் ஓடி ஒழிய வேண்டும்.

நான் தவறு செய்து ஒளிந்து கொண்டிருக்கிறேன் என்ற பிம்பம் சிலருக்கு தேவைப்பட்டதோ என்னவோ அப்படியே உருவாக்கி விட்டார்கள்.

இசைவாணி பாடலை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்

எனது காரின் ஓட்டுநர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் தான். காரில் செல்லும் போது கூட பாடகி இசைவாணி பாடிய பாடல் குறித்து தான் பேசிக் கொண்டிருந்தோம். அவர் பாடிய அந்த பாடலை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்றவர்கள் கொச்சைப்படுத்துவது சரி இல்லை. நம்பிக்கை என்பது உண்மையா? பொய்யா? அப்படிங்கறது இரண்டாம் பட்சம். ஆனால் முதலில் அதை மதிக்க வேண்டும்

சர்ச்சையாக பேச விரும்பவில்லை

மீண்டும் சர்ச்சையாக பேச விரும்பவில்லை. காவல்துறை என் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் மூலம் அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்ளலாம்

தளர்வு கோரியுள்ளேன்

தற்போது இரண்டு படம் மற்றும் இரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு தடைப்பட்டதோடு மட்டுமல்லாமல் எனது மகனின் கல்வியும் தடைப்பட்டு உள்ளது. எனவே காவல் நிலையத்தில் வந்து கையெழுத்து போடும் நடைமுறையில் தளர்வு கோரி உள்ளேன்; திங்கட்கிழமை தான் அந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது" என்றார்.

இசைவாணி மீது புகார்

கடந்த 2018இல் இசைவாணி பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் சர்ச்சை கிளப்பியுள்ளது. ஐ யம் சாரி ஐயப்பா என்ற வரிகளில் தொடங்கும் இந்த பாடல் இந்துக்கள் மனதை புண்படுத்துபடியாக இருப்பதாக கருத்துகள் பகிரப்பட்டன்.

பாலினத்தை காரணம் காட்டி பெண்கள் கோயிலுக்கு செல்வதற்கு தடை விதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோதிலும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்ல தடை உள்ள நிலையில், அது தொடர்பாகவே இசைவாணி பாடிய பாடல் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இசைவாணியின் பாடலுக்கு மேட்டுப்பாளையம், கோவை, சென்னை உள்ளப பல்வேறு பகுதிகளில் இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளிக்கப்பட்டுள்ளது. இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் கூறியிருந்தார். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை நடிகை கஸ்தூரி சுட்டிக்காட்டும் விதமாக இப்படி பேசியுள்ளதாக தெரிகிறது.

இயக்குநர் பா. ரஞ்சித் அறிக்கை

"The Casteless Collective இசைக்குழுவுக்காக ஆறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடப்பட்ட பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு, கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகிறது ஒரு குழு. அடிப்படியைில் அது ஐயப்பன் சம்மந்தப்பட்ட பாடலே அல்ல.

பெண்களின் பல்வேறு உரிமைகளை கோரும் வரிகளில் கோயில் நுழைவை கோரும் உரிமையும் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த முழு உண்மையை மறைத்து, அந்த மொத்த பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிரானதாக இருக்கிறது என சமூக வலைத்தளத்தில் பொய் செய்தியை பரப்ப முயற்சிப்பதன் மூலம் சமூக பதற்றத்தை உருவாக்கி விட முடியும் என முயல்கிறது ஒரு கூட்டம்

கோயில் நுழைவு என்பது அடிப்படை உரிமை. சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மறுக்கப்பட்டவர்களை கேள்வி கேட்டுக்கொண்டே வந்ததின் விளைவாகத்தான் இன்று அவை சட்டமயமாக்கப்பட்டு இருக்கின்றன. அந்த அடிப்படை உரிமைக்கு எதிரான செயல்பாட்டை கண்டித்து தான் இந்த பாடல் உருவாக்கப்பட்டது. இந்த நோக்கத்தை புரிந்துகொண்டு செயல்படும், ஜனநாயகத்தை நம்பும் சக்திகள் ஒவ்வொருக்கும் பாடகர் இசைவாணி அவர்களுடன் துணை நிற்க கோருகிறோம்." என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.